அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில்தான் முதன்முறையாக ஒரு பாடலில் நடனமாடினார் விஜயசேதுபதி. அதையடுத்து அட்டகத்தி தினேஷ் நடித்த திருடன் போலீஸ் படத்தில் ஒரு குத்துப்பாடலில் நடனமாடியவர், வன்மம் படத்தில் கிருஷ்ணாவுடன் இணைந்து நடனமாடினார்.
ஆக, ஆரம்பத்தில் நடனமாட தடுமாறி வந்த விஜயசேதுபதி படிப்படியாக தன்னை வளர்த்துக்கொண்டார். அதனால் இப்போது புறம்போக்கு படத்திலும் ஒரு பாடலில் ஆர்யாவுடன் இணைந்து ஆட்டம் போடுகிறாராம் விஜயசேதுபதி.
இதையடுத்து, இதுவரை கதாநாயகிகளுடன் அதிக நெருக்கம் காட்டி நடிக்காத விஜயசேதுபதி, இப்போது நானும் ரெளடிதான் படத்தில் நயன்தாராவுடன் அதிரடி நடனம் ஆடிக்கொண்டிருக்கிறார். சில கடினமான மூவ்மெண்டுகளைகூட அவர் எளிதாக ஆடி விடுவதைப்பார்த்த நயன்தாராவே பல இடங்களில் விஜயசேதுபதியின் ஆட்டத்தைப்பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்திருக்கிறாராம். இதை தனது நட்பு வட்டாரங்களில் பெருமையாக சொல்லிக்கொண்டு வருகிறார் விஜயசேதுபதி.