அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தனுஷ் நடித்த அனேகன் படத்தில் இடம்பெற்ற டங்காமாரியைப் போன்று தானும் ஒரு பாடலை உருவாக்க வேண்டும் என்று மெனக்கெட்டு வந்த இசையமைப்பாளர் டி.இமான், அதற்காக டங்காமாரியை எழுதிய ரோகேஷை வைத்தே டண்டனக்கா என்ற பாடலை எழுதி வாங்கி அதிரடி பாடலாக வெளியிட்டு விட்டார். அப்படத்தின் ப்ரமோஷன்களில் இப்போது டண்டனக்கா பாடல்தான் முதலிடம் பிடித்து வருகிறது. ஆனால் இந்த பாடல் தனது இமேஜை களங்கப்படுத்துவது போல் உள்ளது என்று டி.ராஜேந்தர் அந்த பாடலை எப்படியும் தடை செய்து விட வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி விட்டார்.
அதையடுத்து ஜெயம்ரவி சமூகம், டி.ஆரை சந்தித்து, எங்கள் குடும்பமே உங்கள் ரசிகர்கள்தான் அதுவும் இந்த படத்தில் உங்களது ரசிகராகவே ஜெயம்ரவி நடித்திருக்கிறார். அப்படியிருக்க படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று நினைத்த பாடலை நீங்களே தடுக்கலாமா? என்று செண்டிமென்டாக பேசிப்பார்த்தார்கள். ஆனால் செண்டிமென்ட் பார்ட்டியான டி.ஆர், இந்த விசயத்தில் இறங்கி வரவில்லை.
நான் முன்வச்ச காலை எப்பவுமே பின்வச்சதில்லை என்று சொல்லிக்கொண்டு, டண்டனக்காவை எப்படியேனும் ரோமியோ ஜூலியட் படத்தில் இருந்து நீக்கி விட வேண்டும் என்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார் டி.ஆர்., அதனால் இனிமேல் அவரை வழிக்கு கொண்டு வருவது நடக்காத காரியம் என்ற முடிவுக்கு வந்து விட்ட அப்படக்குழுவினர் இப்போது சிம்புவிடம் பேச்சுவார்ததை நடத்தி வருகின்றனர்.