Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

சிவகார்த்திகேயனை 'மெர்சலாக' வைத்த டிவிட்டர் ரசிகர்கள்...

23 மார், 2015 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Twitter-interaction-with-Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்த 'காக்கி சட்டை' படம் நேற்று 25வது நாளைத் தொட்டது. அதை முன்னிட்டு நேற்று மாலை 6 மணியளவில் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் 'சாட்' செய்தார். ஒரு மணி நேரம் மட்டுமே சாட் செய்யலாம் என்ற சிவகார்த்திகேயன் ரசிகர்களின் திக்கு முக்காட வைக்கும் எண்ணற்ற கேள்விகளால் ஒன்றரை மணி நேரம் வரை சாட்டிங்கில் இருந்தார்.


6 மணிக்கு பத்து நிமிடம் முன்னதாகவே டிவிட்டரில் வந்த சிவகார்த்திகேயன், ஒருவர் ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள், முடிந்தவரை பல கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சிக்கிறேன் எனத் தெரிவித்தார்.


#ChatwithSK என்ற ஹேஷ்டேக்குடன் சாட் செய்ய வாருங்கள் என்று நேற்று காலையே சிவகார்த்திகேயன் ரசிகர்களை அழைத்தார். மாலையில் சாட் ஆரம்பமான சில நிமிடங்களிலேயே அந்த ஹேஷ்டேக்கை முதலில் சென்னை அளவிலும், பின்னர் இந்திய அளவிலும் 'டிரெண்டிங்'குக்கு கொண்டு வந்துவிட்டனர் ரசிகர்கள்.


விஜய்யிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அஜித்துடன் நடிப்பீர்களா, தனுஷுடன் சண்டையா, சந்தானத்துடன் நடிப்பீர்களா, விஜய் சேதுபதியுடன் நடிப்பீர்களா, சிம்புவுடன் என்ன பிரச்சனை, பெண் ரசிகைகள் ஏன் குறைவு, மீண்டும் தொகுப்பாளராக வருவீர்களா...எனப் பலப்பலக் கேள்விகளைக் கேட்டனர்.


அவர்களின் சுவாரசியமான கேள்விகளுக்கு சிவகார்த்திகேயன் அளித்த பதில்கள்...




நீங்கள் எப்போது ஒரு பெரிய நடிகரை பேட்டி எடுப்பீர்கள்..ஏனென்றால் நீங்கள் பேட்டி எடுத்து நடத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும்.....


இப்போதைக்கு அந்த எண்ணமில்லை, எதிர்காலத்தில் பார்க்கலாம்.


ஒரு படத்தை இயக்கும் எண்ணம் உள்ளதா ?


ஒரு படத்தை இயக்குவது மிகவும் கஷ்டம், அதுவும் முழுநீள காமெடிப் படத்தை இயக்குவது சாதாரண விஷயமல்ல.


உங்களுடைய கோலிவுட், டாலிவுட்டின் ஃபேவரிட் நட்சத்திரங்கள் யாரு..எனக்கு தமிழ் தெரியாது. ஆனாலும், தமிழில் கேட்க முயற்சிக்கிறேன்...


அது மிகப்பெரிய பட்டியல், டோலிவுட்டில் பவன் கல்யாண் சார், மகேஷ் பாபு சார் பிடிக்கும்.


அண்ணா, 100 டிவீட் பண்றேன்..ஆனால், பதிலே இல்லை, அழுது முடிச்சிசிட்டேன். இப்ப நான் ப்ரீ..அண்ணிய செல்லமா எப்படி கூப்பிடுவீங்க..


அடுத்த முறை கண்டிப்பா பதில் சொல்றேன்மா.


உங்க படங்கள்ல உங்க அம்மாவுக்கு பிடிச்ச படம் எது ?


காக்கி சட்டை.




நயன்தாராவுடன் நீங்க சேர்ந்து நடிக்கப் போறதா ஒரு வதந்தி இருக்கே...?


இல்லை, இன்னும் என்னுடைய அடுத்த படத்தைப் பத்தி முடிவு பண்ணலை.


உங்களுடைய “எதிர் நீச்சல், காக்கி சட்டை” இரண்டு படங்களும் ரொம்ப பிடிக்கும். இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் பத்தி சொல்லுங்க...


அவர்தான் என்னை ஸ்கிரீன்ல மாத்தினவரு. ஸ்கிரீன்ல பல விஷயங்களை செய்ய வச்சவரு. என்னுடைய சகோதரர்.


நீங்க உங்க மனைவியைப் பத்தி இதுவரைக்கும் பேசினதே இல்லை. அவங்களைப் பத்தி நீங்களா சில வார்த்தைகளைச் சொல்லுங்க...


மிகப் பெரிய ஆதரவு, எனக்கு எந்த டென்ஷனும் கொடுக்க மாட்டாங்க. நான் ரொம்ப அதிர்ஷ்டசாலின்னுதான் இப்ப சொல்வேன்.


சிம்பு நடிச்ச படத்துல, உங்களுக்குப் பிடிச்ச படம் எது ?


விண்ணைத் தாண்டி வருவாயா.


யார் கிட்ட இருந்து சிறந்த பாராட்டு உங்களுக்குக் கிடைச்சிருக்கு..என்ன மாதிரியான பாராட்டு...?


ஒரு பாட்டி கிட்ட இருந்த கிடைச்ச பாராட்டு. அவங்க ஆரோக்கியமா இருக்கிறதுக்கும், உயிரோட இருக்கிறதுக்கும் என்னுடைய காமெடிதான் எப்பவும் காரணமா இருக்குன்னு சொன்னாங்க. அது ஒரு ஆசீர்வாதமா இருந்தது.


உங்க அம்மாவைப் பத்தி சொல்லுங்க...


அவங்களுக்காகத்தான் நான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.


உங்க சிறந்த தோழியான டிடிகிட்ட பிடிச்ச விஷயம் என்ன ?


அவங்க எப்பவுமே பாசிட்டிவ்வா இருப்பாங்க. என்னுடைய ஆரம்ப காலத்துல இருந்தே எனக்கு ஆதரவா இருக்காங்க.




எங்க 'தல'யைப் பத்தி சொல்லுங்க, அவர் நடிச்ச படத்துல பிடிச்ச படம் எது ?


வீரம்.


தனுஷ் நடிச்சதுலயே பிடிச்ச படம் எது ?


புதுப்பேட்டை.


இப்ப உங்க அப்பா உங்களோட வாழ்ந்துக்கிட்டிருந்தா, அவர் 'காக்கி சட்டை' படம் பார்த்து என்ன சொல்லியிருப்பாரு ?


எங்க அப்பா ஒரு சாதாரண 'கேடர்'ல வேலைக்குச் சேர்ந்து எஸ்.பி.யா உயர்ந்தாரு. அவர் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாரு. ஒரு முழுமையான போலீஸ் படத்துல அவருக்காகவே நடிக்கணும்.


சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு பத்தி சொல்லுங்க...?


அவருடைய ஸ்கிரீன் தோற்றம் ரொம்பவும் பிடிக்கும். அவர் டயலாக் பேற விதம் பிடிக்கும், அவரைச் சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சி.


ஆராதனா பத்தி சொல்லுங்க...


அவள் ரொம்ப நல்லா இருக்கா, உங்க எல்லாருடைய ஆதரவால மகிழ்ச்சியா வளர்ந்துக்கிட்டிருக்கா. ரொம்பவும் முக்கியத்துவம் கொடுக்காம, நம்மள மாதிரி அவங்களும் வளரணும்னு ஆசைப்படறேன்.


கல்லூரி மாணவரா நடிக்க கதை வந்தால் நடிப்பீங்களா ?


அப்படி நடிக்க காத்துக்கிட்டிருக்கேன், அது ரொம்ப ஜாலியா இருக்கும்.


உங்க ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணணும்னு நினைச்சால் என்ன அட்வைஸ் பண்ணுவீங்க ?


உங்களை நம்புங்கள்.


பாண்டிராஜ் சார்தான் உங்களுடைய 'கேபி' யா ?


பாண்டிராஜ் சார், பல கட்டுக்கதைகளை உடைச்சவரு. தேசிய விருது வென்ற அவருடைய இயக்கத்துல அறிமுகமானதை பெருமையா நினைக்கிறேன்.


அனிருத் கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன ?


அவருடைய நம்பிக்கை, மெச்சூரிட்டி, திறமை.




சதீஷ், சூரி இவங்கள்ல எந்த காமெடி ஜோடி உங்களுக்கு வசதியா இருக்கு ?


இரண்டு பேருமே.


ராஜமௌலி சார் கூட பணி புரியணும்னு ஆசை இருக்கா ?




அவர் மிகப் பெரிய இயக்குனர். அடுத்த 5 வருஷத்துல நான் சிறப்பா செய்தேன்னா, அப்புறமா ட்ரை பண்ணுவேன்.


அனிருத், இமான் தவிர வேற இசையமைப்பாளர்களோட வேலை செய்ய மாட்டீங்களா...?


கண்டிப்பா வேலை செய்வேன்.


டபுள் ஆக்ஷன் ரோல் பிடிக்குமா, கிடைச்சா பண்ணுவீங்களா...?


கண்டிப்பா, சிறப்பா நடிக்க ட்ரை பண்ணுவேன்.


விஜய் சேதுபதியை உங்களுடைய போட்டியாளரா நினைக்கிறீங்களா ? அவர் நடிச்ச படத்துல உங்களுக்குப் பிடிச்ச படம் எது ?


எனக்கு போட்டிகள்ல நம்பிக்கை இல்லை, அவருடைய 'பீட்சா' படம் பிடிக்கும்.


பாசிட்டிவ்வா எப்படி இருக்கீங்க ?


நெகட்டிவா பேசாதீங்க, அப்படி பேசப்படறத கேக்காதீங்க.


வெறும் காமெடி கதைகளை மட்டும் தேர்வு செய்யாதீங்க. 5 படத்துக்கு ஒரு படம் வித்தியாசமான படங்கள்ல நடிங்க....


அப்படி இருக்க முயற்சி பண்றேன். ஆனால், எதிர்பார்ப்பு வேற விதமா இருக்கு. சிலர் காமெடி கதைகளைக் கேக்கறாங்க, சிலர் ஆக்ஷன் கதைகளைக் கேக்கறாங்க, எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ண முயற்சிக்கிறேன்.


உங்களை ஃபாலோ பண்ற ரசிகர்களுக்கு ஏதாச்சும் 'டிப்ஸ்' கொடுங்க...


உங்களை நம்புங்க..


ஒரு காமெடியன் கூட கண்டிப்பா நடிச்சே ஆகணும்னா யாரை சொல்வீங்க ?


கவுண்டமணி சார்.


'காக்கி சட்டை' உங்க படங்கள்லயே மிகப் பெரிய பிளாக் பஸ்டர், உங்க கருத்து என்ன ?


அந்தப் படம் 14 கோடி ரூபாய் செலவுல எடுக்கப்பட்டது, 50 கோடிக்கு மேல வசூலாச்சி. அப்ப நீங்களே முடிவு பண்ணிக்குங்க.


நீங்க விஜய் சார் நிகழ்ச்சியை நடத்தும் போது என்ன நினைச்சிருக்கீங்க ?


அவர் கூட மூணு முறை நிகழ்ச்சி பண்ணியிருக்கேன், படபடப்பா இருக்கும்.


ஐரோப்பாவுல இருக்கிற நாங்களும் உங்க படங்களை ரசிக்கிறோம்னு கேள்விப்படும் போது என்ன நினைக்கிறீங்க ?


ரொம்ப பரவசமா இருக்கு. எல்லாருமே என்னை நேசிக்கிறது மகிழ்ச்சியா இருக்கு.




உங்க வாழ்க்கையில நீங்க மதிக்க நினைக்கிற ஒரு விஷயம்...


எனக்காக அடுத்தவங்க தட்டிப் பறிக்க மாட்டேன். யாரையும் ஏமாற்ற மாட்டேன்.


உங்க அப்பாவைப் பத்தி ஒரு வரியில சொல்லுங்க, உங்க அப்பாவுக்கு பெருமை தர்ற மகன் நீங்க...


எங்க அப்பா மிக நேர்மையான, கட்டுப்பாடான போலீஸ் ஆபிசர்.


உங்களுக்கும் சிம்புவுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்குன்னு எப்பவும் ஒரு வதந்தி இருக்கு. அதை இப்பவாவது கிளியர் பண்ணுங்க...


யார் கூடவும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. டிவியில இருந்து என்னைப் பார்த்துட்டு வர்றீங்க. எல்லா பேட்டிகளையும் பார்க்கறீங்க. நான் யாரைப் பத்தியும் பேசினதில்லை. ஒரு ஸ்டாரா அவரை நான் மதிக்கிறேன்.


நீங்க மீடியாவுக்கு வரும் போது உங்களை ஊக்கப்படுத்தினது யாரு ?


என்னுடைய மச்சான், அவர்தான் என்னை ஸ்ட்ராங்கா சப்போர்ட் பண்ணாரு.


தல அஜித் பத்தி சொல்லுங்க, அவர் கிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டீங்க ?


தன்னம்பிக்கை.


விஜய் ரசிகர்கள்கிட்ட நீங்க மன்னிப்பு கேட்கணும், உங்க மிமிக்ரில அவரை ரொம்ப கிண்டல் பண்ணியிருக்கீங்க...


அதெல்லாம் நான் எப்பவோ பண்ணது. அதுவும் அதெல்லாம் வேணும்னே பண்ணது இல்லை. சினிமாவுக்கு வந்த பிறகுதான் அதனால வர்ற பிரச்சனைகள் எனக்குப் புரிஞ்சுது.


பழைய இஞ்சினியரிங் மாணவர் சிவாவை பிடிக்குமா இல்லை நடிகர் சிவாவை பிடிக்குமா ?


நடிகர் சிவாவைத்தான் பிடிக்கும், அவர் என்ன பண்றார்னு அவருக்குத் தெரியும்.


நீங்க எவ்வளவோ பேரை கலாய்ச்சியிருக்கீங்க, உங்களை யாராவது கலாய்ச்சிருக்காங்களா...?


அது நடக்காமலா.


ரஜினி முருகன் படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை விட நல்லா ரீச் ஆகுமா ?


சின்னவங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் ரசிக்கிற மாதிரியான ஒரு மாஸ் என்டர்டெயின்மென்ட் படத்தைக் கொடுக்க முயற்சி பண்றோம். ஒரு குடும்பக் கதைதான் இந்த முறை, ரிசல்ட் என்னன்னு நீங்கதான் சொல்லணும்.


பாலிவுட்ல வாய்ப்பு கிடைச்சா நடிப்பீங்களா ?


எனக்குத் தெரியாது, அந்த அளவுக்கு ரிஸ்க் யாரு எடுப்பாங்கன்னு தெரியலை, பார்ப்போம்.


எதிர்காலத்துல சினிமா கம்பெனி ஆரம்பிச்சி திறமையான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா ?


அதை செய்யறதுக்கு அனுபவம் வேணும். முதல்ல கத்துக்கணும், அப்புறமா அதை மாதிரி பெரிய விஷயத்தையெல்லாம் செய்யலாம்.


உங்களுக்கும், தனுஷுக்கும் சண்டைங்கறது 'காக்கி சட்டை' படத்தோட பப்ளிசிட்டிக்காக பண்ணதுதானே, ஏன்னா, 'நய்யாண்டி'ல இருந்து தனுஷ் இதைப் பண்றாரு....


இதை மாதிரியான பப்ளிசிட்டியில்லாம் நான் கலந்துக்கிறதேயில்லை. எங்களுக்குள்ள சண்டை இல்லைங்கறதுதான் உண்மையான விஷயம்.


சின்ன வயசுல இருந்தே உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர்ஸ் யாரு, யாருடைய இயக்கத்துல நடிக்க்க் காத்துக்கிட்டிருக்கீங்க ?


ஷங்கர் சார், ஏஆர் முருகதாஸ் சார், அது பெரிய பெரிய கனவுதான்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் என்கிட்ட இருக்கிற எல்லா திறமையைம் அதுக்கு நான் வளர்த்துக்கணும்.


எது உங்களை ஒரு தொகுப்பாளரா மாத்துச்சி ?


அதற்கான தேர்வில் என்னை நீக்கியது.


உங்க மேல பலரும் அன்பா இருக்காங்க, அவங்க மனசுல நீங்க இடம் பிடிச்சிருக்கீங்க, அதைப் பத்தி...


என்னுடைய வாழ்க்கையில நான் உண்மையாவும், நிஜமாவும் இருக்கணும்.


நீங்க குடிக்க மாட்டீங்க, புகை பிடிக்க மாட்டீங்க, எதிர்காலத்துல அப்படிப்பட்ட காட்சிகள்ல நடிக்கிறத நிறுத்துவீங்களா ?


முடிஞ்சவரைக்கும் அப்படிப்பட்ட காட்சிகளை தவிர்க்கிறேன்.


உங்க சின்ன வயசுல ஃபேவரிட் கார்ட்டுன் எது ?


டாம் அண்ட் ஜெர்ரி.


நட்சத்திர அந்தஸ்து, உங்க வாழ்க்கையை மாத்துச்சின்னு நினைக்கிறீங்களா ?


இதுக்கு முன்னாடி என்னை யாருமே கண்டுக்கிட்டதில்லை. இப்ப எனக்கு நிறைய நண்பர்கள், ரசிகர்கள், சகோதரர்கள், சகோதரிகள் இருக்காங்க. என் வாழ்க்கையில மிகப் பெரிய மாற்றம், கொடுப்பினையான மாற்றம் ஏற்பட்டிருக்கு.


அஜித் சார் கூட எப்ப படம் பண்ணுவீங்க ?


அடுத்த யோசனையே கிடையாது, எந்த டிமாண்ட்டும் பண்ண மாட்டேன், நேரா ஷுட்டிங் கிளம்பிடுவேன்.


உங்க வாழ்க்கையில மிகச் சிறந்த தருணம் எது ?


விஜய் சார் கையால, விஜய் அவார்ட்ஸ் வாங்கினதும், அதை எங்க அப்பாவுக்காக சமர்ப்பிச்சதும்...


இவ்வளவு அன்பைக் கொடுக்கிற உங்க ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க ?


நான் ரசிகர்களை மட்டுமே நம்பறேன், அவங்க ஆதரவு எனக்கு என்னைக்கும் வேணும். அவங்களுக்காக நிறைய செய்யணும்.


விக்ரம் 'ஐ' படம் பற்றி...


அவர் 'டெர்ரிஃபிக்'....


ஹாலிவுட்ல உங்க ஃபேவரிட் நடிகர் யாரு ?


ஜிம் கேரி.


இப்ப இருக்கிற நடிகர்கள்ல உங்களை எப்படி மதிப்பிடுவீங்க ?, சீக்கிரமா நீங்க டாப் ஆன இடத்துக்குப் போவீங்கன்னு நினைக்கிறோம்...


மதிப்பீடு, ரேங்கிங் இதெல்லாம் தெரியாது. என் திறமையை வளர்த்துக்கிறதுலயும், மக்களை ரசிக்க வைக்கிறதுலயும்தான் கவனம் செலுத்துவேன்.


நீங்க எப்ப வில்லனா நடிப்பீங்க ?


முதல்ல நான் நல்ல நடிகனா வரணும், அப்புறமா ஸ்டிராங்கான ரோல் பண்ணலாம்.


நீங்க 'ஹாட்' ஆ இல்லன்னு பீல் பண்ணது உண்டா, அதாவது ஆர்யா, சிம்பு மாதிரி, உங்களுக்கு பெண் விசிறிகள் கம்மின்னு...


பல பெண்கள் என்னை அவங்க சகோதரனா நினைக்கிறாங்க, அது ஒரு வரம்.


தலைவர் படத்தை முதல் நாள் முதல் காட்சி எப்ப இருந்து பார்க்க ஆரம்பிச்சீங்க ?


'தளபதி' படத்துல இருந்து.


தலைவர் நடிச்சதுலயே உங்களுக்குப் பிடிச்ச படம் எது ?


'பாட்ஷா'.


உங்க வாழ்க்கையிலயே நீங்க சந்திச்ச மிகப் பெரிய தோல்வி எது ?


நான் எதையும் தோல்வியா நினைச்சதில்லை, அதெல்லாம் வெறும் தடைதான்.


வதந்திகளை எப்படி எடுத்துக்கறீங்க ?


தனிப்பட்ட தாக்குதலை நான் பெருசா எடுத்துக்கிறதில்ல, என் குடும்பத்தாருக்கு என்னைப் பத்தி தெரியும். தொழில் ரீதியா கொஞ்சம் அலசிப் பார்ப்பேன், ஆனால் அதிகமா சிரிச்சிட்டுப் போயிடுவேன்.


தனுஷ் படம் இயக்கினால் நடிப்பீர்களா ?


ரெடி.


நகைச்சுவையா நடிக்கிறது பிடிக்குமா, ஆக்ஷன் பிடிக்குமா ?


நகைச்சுவை.


விஜய் சேதுபதி அவருடைய தயாரிப்புல, அவர் கூட நடிக்கணும்னு கேட்டால் நடிப்பீங்களா ?


நல்ல கதையாக இருந்தால் நடிப்பேன்.


எந்த ஒரு பாட்டை, எத்தனை முறை கேட்டாலும், சலிக்காதுன்னு நீங்க நினைக்கிற பாட்டு எது ?


காலையில் தினமும் கண் விழித்தால்...


தனுஷ் நம்பரை என்னன்னு உங்க மொபைல்ல போட்டு வச்சிருக்கீங்க...?


ஜீனியஸ்.




தனுஷ் பத்தி சில வார்த்தை...


இந்திய சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்.


அனிருத் இசை பற்றி....


எனெர்ஜட்டிக்.


சூர்யா பற்றி சில வார்த்தைகள்...அவர் கிட்ட இருந்து என்ன கத்துக்கிட்டீங்க ?


கடின உழைப்பு, ஒரு மனிதனுடைய வாழ்க்கையையே மாற்றிடும்.




நீங்க விஜய் சாரை இமிடேட் பண்றதா சொல்றாங்க ?


நான் இப்பதான் கத்துக்கிட்டு வர்றேன். அவருடைய நடனத்தை சின்ன வயசுல இருந்து பார்த்துக்கிட்டு வர்றேன், அதுவும் காரணமா இருக்கலாம். என்னுடைய சொந்த ஸ்டைல்ல பண்ணணும்னு முயற்சி பண்ணிட்டு வர்றேன், அதுக்கு கடினமா உழைச்சிக்கிட்டு இருக்கேன்.




சந்தானம் கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சால் நடிப்பீங்களா ? உங்க ரெண்டு பேரைப் பத்தி நிறைய வதந்தி இருக்கே...?


ஏன் நடிக்க மாட்டேன், நல்ல ஒரு புராஜக்ட்டுக்காக காத்துக்கிட்டிருக்கேன்.


உங்களோட அபிமான கிரிக்கெட்டர் யாரு ? ரோகித் சர்மா பத்தி என்ன நினைக்கிறீங்க ?


சச்சின், தோனி என்னுடைய அபிமான கிரிக்கெட்டர்கள். இப்ப இருக்கிற யங் டீமான விராட், ரெய்னா, ரோகித் ரொம்பவும் உத்வேகத்தோட இருக்கு.


உங்கள் ரசிகர்களுக்கும் உங்களை வெறுப்பவர்களுக்கும் என்ன சொல்ல விரும்பறீங்க ?


எனக்குள்ள நம்பிக்கை இல்லாத போது என்னை ஆரம்பத்துல இருந்தே ஊக்கப்படுத்தினது ரசிகர்கள்தான்.


ஸ்ருதிஹாசன் கூட நடிச்ச அனுபவம் ?


ரொம்ப சிம்பிள் ஆனவங்க, பணிவானவங்க.


எதிர்காலத்துல என்ன மாதிரியான படத்துல நடிக்க விருப்பம் ?


குடும்பக் கதைகள், நகைச்சுவை கலந்த காதல் கதைகளில் நடிக்க ஆசை.


டிவிட்டர் ரசிகர்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க...


அவங்க கொடுத்த வரவேற்பைப் பார்த்து மெர்சலாயிட்டேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in