டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நியூஸ் 7 சேனலின் பரபரப்பான செய்தி வாசிப்பாளர் பனிமலர். கோயம்புத்தூரை சேர்ந்த பனிமலர் பேஷன் டிசைனிங் படிப்பதற்காக சென்னை வந்தார். வந்த இடத்தில் நியூஸ் 7 சேனலின் செய்தி வாசிப்பாளராகிவிட்டார். சில மாதங்களிலேயே நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார்.
இவர் தொகுத்து வழங்கி வரும் வியப்பூட்டும் விஞ்ஞானம் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. விண்வெளி ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்தும் கொடுக்கும் நிகழ்ச்சி இது. இப்போது பனிமலர் ஃபீனிக்ஸ் பெண்கள் என்ற புதிய நிகழ்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். இது எந்த பின்னணியும் இல்லாமல் தனி ஆளாக நின்று தாங்கள் சார்ந்த துறையில் சாதனை படைத்த பெண்களை சந்தித்து அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி.