மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் |
புதுயுகம் தொலைக்காட்சி புகழ்பெற்ற கொரியன் டிராமாக்களை கே சீரீஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பி வருகிறது. இந்த வரிசையில் வருகிற திங்கள் (மார்ச் 23) முதல் தி மாஸ்டர்ஸ் சன் என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. மொத்தம் 17 ஒருமணி நேர எபிசோட்களை கொண்ட இந்த தொடர் 2013ம் ஆண்டு வெளிவந்தது. ஜின் ஹயூக் இயக்கி இருந்தார். கோங் ஹயோ ஜின், சோ லி சுப் நடித்திருந்தார்கள்.
ஒரு பழைய அடுக்குமாடி கட்டடத்தில் குடியேறும் இளம் பெண் ஜெசிகாவுக்கு அந்த கட்டடத்தில் உலவும் ஆவிகளுடன் பேசும் சக்தி கிடைக்கிறது. ஆவிகள் தங்களுடைய மனக்குறைகளை அவளிடம் சொல்லி அதனை தீர்த்து வைக்கச் சொல்கிறது. சேர முடியாத காதல், பழிவாங்கப்பட வேண்டிய எதிரி என பல அசைன்மெண்ட்டுகளை ஜெசிகாவுக்கு சொல்கின்றன ஆவிகள். ஆரம்பத்தில் ஆர்வமாக செய்யும் ஜெசிகாவுக்கு ஒரு கட்டத்தில் அதுவே துன்பமாகிறது. அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளைஞன் ஜின்னை தொட்டதும் ஆவிகள் விலகி ஓடுகின்றன. இதனால் ஆவிகளிடமிருந்து தப்பிக்க ஜின்னை காதலிக்க ஆரம்பிக்கிறாள் ஜெசிகா அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தொடரின் மீதி கதை. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.