ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டின் தற்போதைய கனவு கன்னியான கத்ரீனா கைப், அபிஷேக் கபூர் இயக்கும், ''ஃபிட்டூர்'' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மூன்று பேருக்கு இடையே நடக்கும் சம்பவங்கள் தான் ஃபிட்டூர். இதில் காஷ்மீர் பையனாக ஆதித்யாவும், பாகிஸ்தான் பெண்ணாக கத்ரீனாவும், பேகம் எனும் கேரக்டரில் ரேகாவும் நடிக்க இருக்கின்றனர். சார்லன் டிக்கன்ஸ் எழுதிய தி கிரேட் எக்ஸ்பட்டேஷன் நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாக இருக்கிறது. இப்படத்தில் ராகுல் பட், லாரா தத்தா, ஆதித்யா ராவ், அக்ஷ்ய் ஓபுராய், அஜய் தேவ்கான் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு பிப்., 12ம் தேதி படம் வௌியாக இருக்கிறது.