டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரொமான்ஸ் பண்ணுவதற்கு நேரம் காலமும் கிடையாது. வயது வரம்பும் கிடையாது என்பார்கள். ஆனபோதும் பெரும்பாலான சினிமாக்களில் திருமணத்திற்கு முந்தைய காலகட்டத்து ரொமான்ஸைதான் அதிகமாக காண்பித்து வருகிறார்கள். ஆனால், கார்த்தி நடித்துள்ள கொம்பன் படத்தில் திருமணத்திற்கு பிறகு நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளையே அதிகமாக படமாக்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக கார்த்தியுடன் செம ரொமான்ஸ் செய்துள்ளாராம் லட்சுமிமேனன். இந்த விசயத்தில் கார்த்தியும் சளைத்தவர் இல்லை என்பதால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட பிறகு நடித்த காட்சிகளில் அதிக நெருக்கம் காட்டி ரொமான்ஸ் செய்திருக்கிறார்களாம். அதுவும், படம் பார்க்க வரும் கணவன்-மனைவிகளுக்கு ரொமான்ஸ் ஆசையை மீண்டும் தூண்டி விடும் வகையில் கிளுகிளுப்பாக நடித்திருக்கிறார்களாம். அந்த வகையில், கார்த்திக் சில காட்சிகளில் மீசையை முறுக்கிக்கொண்டு அலைந்தாலும் அவரை தனது முந்தானையால் கட்டிப்போட லட்சுமிமேனன் காட்டும் ரொமான்ஸ் படுசூப்பராக வந்திருக்கிறதாம். அந்த அளவுக்கு வெட்கம், காதல், மோகம் என மூன்றையும் தனது முகபாவனையில் பிழிந்து ஊற்றியிருக்கிறாராம் லட்சுமிமேனன்.