'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் ரஜினிகாந்த்தின் முதல் சம்மந்தியும், தனுஷின் அப்பாவுமான, இயக்குநர் கஸ்தூரி ராஜா, கோவையில், பா.ஜ.வின் தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில், தன்னை பா.ஜ.வில் இணைத்து கொண்டார். ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த்தை பா.ஜ.வில் இணைக்க அந்த கட்சி தொடர்ந்து முயற்சித்து வரும் வேளையில், கஸ்தூரி் ராஜா திடீரென பா.ஜ.வில் இணைந்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் தான் காரணம் என., கோலிவுட்டில் ஒரு செய்தி பரவியது. ஆனால் இதனை கஸ்தூரி ராஜா முற்றிலுமாக மறுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மோடியின் செயல்திட்டங்களால் நான் ஈர்க்கப்பட்டேன். அதனால் தான் நான் பா.ஜ.வில் இணைந்தேன். நம் நாட்டை நிச்சயம் மோடி, வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வார், இந்தியாவும் வல்லரசாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் பா.ஜ.வில் இணைந்ததற்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது நானாக எடுத்த முடிவு என்று கூறியுள்ளார்.