600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஜெயம் ரவி நடித்த படம் ரிலீஸாகியே பல மாதங்களாகிவிட்டன. அதைவிட அவரது படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்குமளவுக்கு சூப்பர்ஹிட்டாகி பல வருடங்களாகிவிட்டன. எனவே தற்போது அவர் நடித்து வரும் ரோமியோ ஜூலியட் படத்தின் பாடல்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கிறார் ஜெயம்ரவி. 50க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ள டி.இமான் ரோமியோ ஜூலியட் படத்தில் முதல்முறையாக ஜெயம் ரவியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார்.
டங்காமாரி பாடலை எழுதிய லோகேஷ் இந்தப்படத்திலும் ஒரு கானாப்பாடல் எழுதி இருக்கிறார். அந்தப்பாடலை அனிருத் பாடி இருக்கிறார். சிங்கிள் ட்ராக்காக அண்மையில் இந்தப்பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. டன்ட்டனக்கா டன்ட்டனக்கா... என மியூஸிக் சேனல்களில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ரோமியோ ஜூலியட் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், படத்தின் பாடல்கள் வரும் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளன. தற்போது முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் இமான் தன் படத்திற்கு முதல்முறையாக இசையமைத்திருப்பதால் ரசிகர்களிடம் அப்பாடல்களுக்குக் அமோக வரவேற்பு நிச்சயம் என்று நம்பிக்கொண்டிருகிறார் ஜெயம்ரவி.