ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விஜயகாந்த் தனது இளைய மகனான சண்முக பாண்டியனை தனது சினிமா வாரிசாக களம் இறக்கி உள்ளார். தனது தாய் மாமன் எல்.கே.சுதீஷ் தயாரிப்பில், ஹீரோவாக அறிமுகமாகிறார் சண்முக பாண்டியன். சகாப்தம் படத்தை சுரேந்திரன் இயக்குகிறார். நவீன் கிருஷ்ணா கதை எழுதியுள்ளார். கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார், எஸ்.கே.பூபதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சண்முக பாண்டியனுடன் புதுமுகங்கள் நேகா, சுப்ரா நடித்துள்ளனர். இவர்கள் தவிர ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட், சுரேஷ், தலைவாசல் விஜய், நண்டு ஜெகன், சிம்கம் புலி, பவர் ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளனர்.
பொள்ளாச்சி, மலேசியா, சென்னையில் மூன்று கட்டமாக படப்பிடிப்பு நடந்துள்ளது. விஜயகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. முதலில் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு/ஏ கொடுத்தனர், அதன் பிறகு சில காட்சிகளின் நீளம் குறைக்ககப்பட்டு யு சான்றிதழ் பெற்றனர்.
தற்போது படம் ஏப்ரல் 2ந் தேதி வெளிவர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முக பாண்டியன் சினிமாவில் நடிப்பதற்காக தன் உடல் எடையை கணிசமாக குறைத்து, கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி, நடன பயிற்சி, சண்டை பயிற்சி என சினிமாவுக்கான அடிப்படை விஷயங்களை கற்று இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவர் படித்த சினிமாவுக்கு ஏப்ரல் 2ந் தேதி பரீட்சை நடக்கிறது. வெற்றி பெறுவாரா என்பது ஏப்ரல் 2ந் தேதி மாலை தெரியும்.