நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? |
100 படங்களுக்கு மேல் நடன இயக்குனராக பணியாற்றிய ஹரிகுமார் தூத்துக்குடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு போடிநாயக்கனூர் கணேசன், திருத்தம், மதுரை சம்பவம் படங்களில் நடித்தார். சங்கராபுரம் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அது இன்னும் வெளிவரவில்லை. இந்த நிலையில் தற்போது காதல் அகதீ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
உள்ளூர் மார்க்கெட்டில் காய்கறி மண்டி நடத்தும் தாதாவுக்கு சாதாரண ஏழை வீட்டு பெண் மீது காதல். தன் மிரட்டலால் அத்தனை பேரையும் பணிய வைக்கும் தாதாவுக்கு மிரட்டி காதலை பணிய வைக்க முடியவில்லை. பிறகு எப்படி அவளது காதலை பெறுகிறான் என்பதுதான் கதை. தாதாவாக ஹரிகுமாரும், ஏழை வீட்டு பெண்ணாக புதுமுகம் ஆயிஷாவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர மம்தா ராவத், பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து உள்பட பலர் நடிக்கிறார்கள். ஷியாம் சுந்தர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பர்ஹான் ரோஷன் இசை அமைத்துள்ளார். புதுமுகம் ஷாமி திருமலை இயக்கி உள்ளார். ராமய்யா சினி கிரியேஷன் என்ற புதிய நிறுவனம் தயாரித்துள்ளது.