ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
இயக்குநரும், நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே, கும்மிப்பாட்டு, கரிசகாட்டுப்பூவே போன்ற கிராமத்து மண் சார்ந்த படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. நடிகர் தனுஷின் தந்தையும், நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியும் ஆவார். தற்போது இவர் காசு பணம் துட்டு என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.
கஸ்தூரி ராஜாவுக்கு முன்பு போல் படங்கள் இயக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. இந்தசூழலில், கஸ்தூரி ராஜா திடீரென அரசியலில் இறங்கியுள்ளார். இவர் பா.ஜ., கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.வை வலுப்படுத்த பா.ஜ.வின் தேசிய தலைவர் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து செல்கிறார். அதன்படி இன்று கோவை வந்தார் அமித்ஷா. இங்கு பா.ஜ.வின் செயற்குழு கூட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்திருந்த கஸ்தூரி ராஜா, தன்னை பா.ஜ. கட்சியில் இணைத்து கொண்டார். அவருக்கு பா.ஜ.வின் உறுப்பினர் அட்டையை அமித் ஷா வழங்கினார்.
பா.ஜ. கட்சி, நடிகர் ரஜினிகாந்த்தை தங்களது கட்சியில் இழுக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் ரஜினியோ பிடி கொடுக்காமல் நழுவி கொண்டே செல்கிறார். இந்தசூழலில் அவரது சம்மந்தியும், இயக்குநரும், தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா, பா.ஜ.வில் இணைந்துள்ளது மிகவும் கவனிப்பட வேண்டிய ஒன்றாக தெரிகிறது.