ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் காஜல்அகர்வால் கடைசியாக நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அங்கிருந்து அப்படியே தமிழுக்கு தாவி விட்டார். தமிழில் தனுசுடன் மாரியில் நடித்துக்கொண்டிருப்பவர், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்திலும் நடிக்கிறார்.
ஆக, தமிழில் இரண்டு படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால், இந்தியிலும் இரண்டு படங்களில் நடிக்கிறார். மேற்கொண்டும் சில மெகா ஹீரோக்களின் படங்களை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். அதோடு, படக்கூலியினையும் கணிசமான அளவு குறைத்துக்கொண்டுள்ள காஜலுக்கு தற்போது படத்துக்குப்படம் ரொமான்ஸ் செய்தோம், டூயட் பாடினோம் என்பதை விட வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் ஆர்வமும் மேலோங்கியிருக்கிறதாம்.
அவரது இந்த மாற்றத்திற்கு காரணம், சமீபத்தில் ராம்சரணுடன் அவர் நடித்த தெலுங்கு படத்தில் கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றது. அதனால் இதே ரூட்டை தொடர்ந்தால் கவர்ச்சி நடிகையாகி விடுவோம் என்று உஷாராகி விட்ட காஜல், இப்போது நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா போன்ற நடிகைகள் வித்தியாசமான கேரக்டர்களில் கமிட்டாகி வருவதால், தனது ரூட்டையும் அதேபோன்று மாற்றிக்கொண்டு பர்பாமென்ஸ் நடிகை பட்டியலில் இடம்பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். அதனால், எனக்கும் அழுத்தமான காட்சிகளை கொடுங்கள் என்று டைரக்டர்களின் காது கடித்து வருகிறார் காஜல்அகர்வால்.