ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின மெகாஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள், ஸ்ரீஜாவிற்கு மீண்டும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், வீட்டின் எதிர்ப்பை மீறி, ஸ்ரீஜா, நண்பர் சிரிஷ் பரத்வாஜை, கோயிலில் திருமணம் செய்து கொண்டார். தனது வீ்ட்டிலிருந்தே, தனக்கு கொலைமிரட்டல் வருவதாக கூறி, பரபரப்பையும் ஏற்படுத்தினார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உண்டு. இந்நிலையில், சிரிஷ் பரத்வாஜ் வீட்டில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி, சமீபத்தில், சிரிஷிடமி்ருந்து விவாகரத்து பெற்று, சிரஞ்சீவியின் வீட்டிற்கே, ஸ்ரீஜா திரும்ப வந்து விட்டார். சில ஆண்டுகாலம், மகளுடன் அமெரிக்காவில் தங்கி இருந்த ஸ்ரீஜா, மீண்டும் ஐதராபாத் திரும்பியுள்ளார். அவருக்கு மீண்டும் திருமணம் செய்து வைக்க சிரஞ்சீவி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். விரைவில், ஸ்ரீஜா மீண்டும் மணக்கோலம் பூணும் நாள் தொலைவில் இல்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.