மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தமிழ் சினிமாவில் 80களில் ஒரு பாடலுக்கு நடனமாடும் நடிகைகளை கவர்ச்சிக் கன்னிகள் என்று அந்தக் காலத்தில் அழைப்பார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா என 80களிலும், 90களின் ஆரம்பத்திலும் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடும் நடிகைகள் நிறைய பேர் இருந்தனர். கிளாமரான நடனங்களை படத்தின் ஹீரோயின்கள் ஆட மாட்டார்கள். அதற்குப் பதிலாக கதையில் சிறிய மாற்றம் செய்து, ஒரு பாரிலோ, ஹோட்டலிலோ, வில்லன் இருப்பிடங்களிலோ ஏதோ ஒரு விதத்தில் கவர்ச்சி நடனங்களை இடம் பெறச் செய்வார்கள். ஒரு சில படங்கள் அதற்காகவே கூட ஓடியிருக்கின்றன.
90களின் இறுதியில் அந்த ஒரு பாடல் நடனங்களையும் படத்தில் நடிக்கும் நாயகியர்களே செய்யப் போக அதன் பின் அப்படிப்பட்ட கிளாமர் நடனங்களுக்கும், அந்தப் பாடல்களுக்கு மட்டுமே நடனம் ஆடும் நடிகைகளுக்கும் வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் எப்போதாவது ஒரு முறை அப்படிப்பட்ட நடனங்களும் தற்போது இடம் பெற்று வருகின்றன.
சமீபத்தில் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' படத்தில் விக்ரம் உடன் நடனமாட தெலுங்கின் முன்னணி நடிகையாக இருந்த சார்மியை அழைத்து வந்தார்கள். அவரும் விக்ரம் என்பதால் மட்டுமே அப்படி ஒரு பாடலுக்கு மட்டும் நடிக்க சம்மதித்து ஆடிக் கொடுத்தாராம். அந்த ஒரு பாடலில் நடனமாடியதற்கு மட்டும் சார்மிக்கு சம்பளமாக 25 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள் என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.