அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தன் நண்பர் ஜான்மேக்ஸ் என்பவருடன் இணைந்து ஷாலோன் ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனத்தைத்தொடங்கிய இயக்குநர் பிரபு சாலமன், சாட்டை, மைனா உட்பட சில படங்களை தயாரித்தார். அதன் பிறகு ஜான்மேக்ஸ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஷாலோன் ஸ்டுடியோஸ் பட நிறுவனத்திலிருந்து விலகி காட் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தனியாக ஆரம்பித்தார். கடைசியாக அவர் இயக்கிய கயல் படத்தைக் கூட எஸ்கேப் ஆர்ட்டிஸ் உடன் இணைந்து காட் பிக்சர்ஸ் சார்பில்தான் தயாரித்தார்.
பிரபுசாலமன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான 'கயல்' படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. என்றாலும், பிரபுசாலமனுக்கு தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்நிலையில், கயல் படத்தின் மூலம் பிரபு சாலமன் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய சந்திரன் என்ற புதுமுகத்தை வைத்து, தனது 'காட் பிக்சர்ஸ்' பட நிறுவனம் சார்பில் புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்தப் படத்தை 'சாட்டை' படத்தை இயக்கிய அன்பழகன் இயக்குகிறார். பிரபு சாலமனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் தேர்வு இப்போது நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவிருக்கிறது.