ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த டிசம்பர் மாதம் கன்னடத்தில் வெளியான படம் மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி. யாஷ், ராதிகா பண்டிட், நடித்துள்ள இந்தப் படத்தை சந்தோஷ் ஆனந்த்ராம் இயக்கி இருந்தார். ஜெயன்னா கம்பைன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. ரொமாண்டிக் காமெடி படமான இது அங்கு பெரிய வெற்றியை பெற்றது.
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன். இதன் ரீமேக் உரிமத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார். இதில் யாஷ் நடித்த கேரக்டரில் சிவகார்த்திகேயன், ஆர்யா, விஷால் ஆகியோரில் ஒருவர் நடிக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. கன்னட படத்தில் ஹீரோ யாஷ் விஷ்ணுவர்த்தனின் ரசிகராக நடித்திருப்பார். தமிழில் ரீமேக் செய்யும்போது ரஜினி, அல்லது கமல் ரசிகராக கதையை மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். ஹீரோயினாக ராதிகா பண்டிட்டே நடிக்கலாம் என்கிறார்கள்.