பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
புது தயாரிப்பு நிறுவனமான ஆர்.ஆர்.ராகவேந்திரா பிலிம்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ், மற்றும் ஸ்ரீசினி கிரியேசன்ஸ் இணைந்து தயாரிக்கிற படம் காதல் சொல்ல நேரமில்லை. புதுமுகம் உதயகுமாருக்கு ஜோடியாக இனியா நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். குமார் பாண்டியன் இசையையும், ராஜ்குமார் ஒளிப்பதிவையும் கவனிக்கிறார்கள். ஸ்ரீநிவாசன் டைரக்ட் செய்கிறார்.
இது ஒரு பிளே பாய் கதை என்கிறார் ஸ்ரீநிவாசன். மேலும் அவர் கூறியதாவது: சில பேர் தங்களை அழகனாவும், மன்மதனாகவும் நினைத்துக் கொண்டு பார்க்கிற பெண்களையெல்லாம் படுக்கையில் வீழ்த்திவிட வேண்டும் என்று நினைப்பார்கள். முடியாவிட்டாலும் வீழ்த்தி விட்டதாக பெருமையாக சொல்லிக் கொண்டு திரிவார்கள். இப்படிப்பட்ட பிளே பாய் குணம் படைத்த ஒருவன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்கிறான். அவனை ஒரு பெண் எப்படி மீட்கிறாள். அதன் பிறகு அவன் பெண்ணின் பெருமையை எப்படி உணர்கிறான் என்கிற கதை.