டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அனுஷ்கா நடித்து வரும் பிரமாண்ட தெலுங்கு படம் ருத்ரமாதேவி. இது 1259ம் ஆண்டு முதல் 1295ம் ஆண்டுவரை ஆந்திராவில் உள்ள வாரங்கல்லை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த காகதீய ராணி ருத்ரமாதேவியின் வரலாற்றுக் கதை. தமிழ்நாட்டு ராணி மங்கம்மாள் மாதிரி ஆந்திரத்து மங்கம்மா இவர். 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ருத்ரமாதேவியாக நடித்த அனுஷ்கா நிஜமான தங்க நகைகளை அணிந்து நடித்தார். ஒவ்வொரு முறையும் ஒன்று முதல் 3 கிலோ வரையிலான நகைகளை அணிந்து நடித்தார். 12ம் நூற்றாண்டு காலத்தில் வரையப்பட்ட ராணி ருத்ரமாதேவியின் ஓவியம், அவரது சிலைகள் ஆகியவற்றைப் பார்த்து அதன்படி நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்ட நகைகள் அவை. தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் இந்த நகைகளை சென்னையில் உள்ள என்.ஏ.சி. தங்க மாளிகை என்ற நகைக்கடை வாங்கி உள்ளது. அதனை படம் வெளியானதும் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.