மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பாலிவுட் திரையுலகின் இளவரசியாக உள்ள சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
28 வயதான சோனம் கபூர், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக உள்ளார். சல்மான் கான், அனுபம் கேர், சோனம் கபூர் நடிப்பில் உருவாகி வரும் பிரேம் ரத்தன் தான் பயோ படத்தின் சூட்டிங். குஜராத் மாநிலம் கோண்டல் பகுதியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சோனம் கபூருக்கு, திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில், பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக ராஜ்கோட்டிற்கு அழைத்துவரப்பட்ட அவர், ஸ்டெர்லிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனம் கபூர், ஐ.சி.யூவில் வைக்கப்பட்டுள்ளார். படக்குழுவினருக்கு, பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சோனம் கபூர் ,விரைவில், மும்பை கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.