பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அன்னக்கிளி படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கியவர் இசைஞானி இளையராஜா. தற்போது தமிழில் பல படங்களுக்கு இசையமைக்கிறார் அதில் பாலாவின் தாரை தப்பட்டை அவருக்கு ஆயிரமாவது படமாகியிருக்கிறது.
இதற்கிடையே சமீபத்தில் இந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் நடித்த ஷமிதாப் படத்துக்கு இசையமைத்த இளையராஜா, தற்போது தெலுங்கில் அனுஷ்கா நடிப்பில் பிரமாண்டமாக வளர்ந்துள்ள ராணி ருத்ரமா தேவி படத்துக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கிறார். ஆக இப்போதும் பிசியான இசையமைப்பாளராகவே இருக்கிறார். அதுவும் இந்தியா முழுக்க பல மொழிப்படங்களுக்கும் இசையமைத்து வருகிறார் இளையராஜா.
இந்த நிலையில், இதுவரை தான் இசையமைத்த படங்களின் பாடல்களுக்கான ரைட்ஸை தானே வைத்திருந்த இளையராஜா, அந்த ஆயிரம் படங்களின் பாடல் ரைட்ஸையும் அந்தந்த தயாரிப்பாளர்களுக்கே கொடுக்கப்போகிறாராம்.