ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி, தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக ஏற்கனவே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறார் இம்ரான் ஹாஸ்மி. இந்நிலையில் அசாரூதின், ஐதராபாத்தை சேர்ந்தவர் என்பதாலும், அவர் தெலுங்கு பேசக்கூடியவர் என்பதாலும், இம்ரான் ஹாஸ்மியும் தெலுங்கு கற்று வருகிறார். படத்தில் சில காட்சிகளில் இம்ரான், தெலுங்கு மொழியில் பேச வேண்டியுள்ளதாம். அதனால் தெலுங்கு மொழி கற்று வருகிறார் இம்ரான் ஹாஸ்மி. சமீபத்தில், அசாரூதின் போன்று பேட்டிங் செய்ய பயிற்சியில் ஈடுபட்ட போது இம்ரான், காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.