ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தற்போது கோலிவுட் கோதாவில் எகிறிக்கொண்டிருக்கும் நடிகைகளில் அட்டகத்தி நந்திதாவும் குறிப்பிடத்தக்கவர். இன்னும் மேல்தட்டு ஹீரோக்களுடன் டூயட் பாடவில்லை. மற்றபடி நல்ல நடிகை என்கிற பெயரை ரொம்பவே சம்பாதித்து விட்டார்.
விஜயசேதுபதியுடன் நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஷ்ணுவுடன் நடித்த முண்டாசுப்பட்டி போன்ற படங்கள்தான் அவருக்கு இப்படியொரு பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதன்காரணமாக, தற்போதைய நடிகைகளில் வெயிட்டான வேடம் என்றால் நந்திதாவை நம்பிக்கொடுக்கலாம் என்று சில டைரக்டர்களே அவருக்கு சிபாரிசு செய்கிறார்கள்.
இதைப்பற்றி நந்திதாவைக்கேட்டால், இப்படி டைரக்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நான் ஆனதற்கு நான் காரணமல்ல. அந்த வாய்ப்பை கொடுத்த அந்த டைரக்டர்கள்தான் காரணம. அதனால் என்னைப் பொறுத்தவரை எல்லா புகழையும் எனக்கு வாய்ப்புகளை கொடுத்த அந்த டைரக்டர்களுக்கே சமர்ப்பிக்கிறேன் என்கிறார்.