ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேயர்களின் பாடும் திறமையை வெளிக்கொண்டு வரும் சூப்பர் சிங்கர் கான்செப்ட் 2006ம் ஆண்டு விஜய் டி.வியால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது எல்லா சேனல்களும் ஏதோ ஒரு பெயரில் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பத்து ஆண்டுக்குள் நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள். நிறைய சீசன்கள், ஜூனியர், சீனியர் என்ற பிரிவுகள் என பல்வேறு மாற்றங்களையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் மூலம் பல பின்னணி பாடகர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார்கள். ஆரம்பத்தில் சேனல் வளாகத்தில் உள்ள சிறிய அரங்கில் நடந்த போட்டிகள் பின்னர் சினிமா ஸ்டூடியோக்களில் உள்ள புளோர்களில் அரங்கம் அமைத்து, பிரமாண்ட செட்டுகள் போட்டு நடத்தப்பட்டது. தற்போது சென்னையில் நடந்து வந்த இந்த போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் அடுத்தகட்டமாக சூப்பர் சிங்கர் போட்டிகள் உலகம் முழுவதும் நடத்தப்பட இருக்கிறது. தமிழர்கள் அதிகம் வாழும் லண்டன், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். முதலாவதாக சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகள் வருகிற ஏப்ரல் 3ந் தேதி லண்டனில் நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து மற்ற போட்டிகளும் பல்வேறு நாடுகளில் நடக்கும் என்று சேனல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.