Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

கோடிகளில் புரளும் பாலிவுட் பிரபலங்கள்!

04 அக், 2010 - 12:23 IST
எழுத்தின் அளவு:

 சமீப காலமாக பாலிவுட் பிரபலங்கள் பலரும் கோடியில் புரண்டு கொண்டிருக்கிறார்கள். பாலிவுட்டில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி வசூலை வாரி குவிப்பதால் நடிகர் - நடிகை மற்றும் இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்களின் சம்பளம் வெகுவாக கூடியிருக்கிறது. 3 இடியட்ஸ், தபாங் ஆகியவை மிகப் பெரிய அளவிலான ஹிட் படங்களாக அமைந்ததோடு மிகப் பெரிய வருவாயையும் ஈட்டிக் கொடுத்துள்ளது. 8 மாதகாலத்திற்குள் இந்த இரு படங்களும் ரூ. 100 கோடிக்கு மேல் வருவாயை ஈட்டித் தள்ளியுள்ளதால் பாலிவுட் பெரும் உற்சாகமடைந்துள்ளது, பணமும் பெருமளவில் புழங்கத் தொடங்கியுள்ளதாம்.

நடிகர்களைப் பொறுத்தவரை சல்மான் கான் ரூ. 21 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். ஆமிர்கான், ஷாருக்கான் இதில் பின்தங்கியுள்ளனர். ஆமிர்கான் தனது 3 இடியட்ஸ் படத்தின் லாபத்தில் ஒரு பங்கைப் பெற்றார். அதுவே ரூ. 50 கோடி என்கிறார்கள். ஷாருக்கான் தற்போது தனது சொந்தத் தயாரிப்பில் ஆர்ஏ ஒன் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இதில் வரும் வருமானம் முழுவதும் அவருக்கே போய் விடும்.

நடிகைகளைப் பொறுத்தவரை கரீனா கபூர்தான் நம்பர் ஒன் சம்பள நடிகை. ஏஜென்ட் வினோத் படத்திற்கும், பாடிகார்ட் படத்திற்கும் அவர் பெற்ற சம்பளம் ரூ. 4 கோடி. காத்ரீனா கைப் ரூ.3 கோடி சம்பளம் வாங்குகிறார். சைப் அலி கான் ரூ. 13 கோடி சம்பளம் வாங்குகிறார். ஷாஹித் கபூருக்கு ரூ. 8 முதல் 9 கோடி வரையில் சம்பளம் உள்ளது. முன்னணி இயக்குநர்களுக்கும் பெருமளவில் சம்பளம் தருகிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி ரூ. 30 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம் குஸாரிஸ் படத்துக்காக. ஒரு படம் ஹிட்டடித்து விட்டால் கூட போதும், அந்த இயக்குநருக்கு குறைந்தது ரூ. 9 கோடி சம்பளம் தருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

மணிகண்டன் - bangalore,இந்தியா
03 மார், 2011 - 13:15 Report Abuse
 மணிகண்டன் மக்களே கொஞ்சம் யோசிங்க ...........
Rate this:
நரிக்குறவன் - london,யுனைடெட் கிங்டம்
05 அக், 2010 - 21:07 Report Abuse
 நரிக்குறவன் பசியால் பற்றி எரிகிறது வறுமையில் வாடும் இந்தியனுக்கு. ஆனால் கோடியில் இந்த கூத்தாடிகள். மானம் கெட்ட உலகமடா. அயோ இதை கேக்க யாரும் இல்லையா.
Rate this:
இன்கம் டாக்ஸ் - Chennai - Mumbai,இந்தியா
05 அக், 2010 - 15:25 Report Abuse
 இன்கம் டாக்ஸ் உங்கள் வருமானவரி 30 ~ 40 % உடனே கட்டவும்.
Rate this:
04 அக், 2010 - 17:01 Report Abuse
 கூத்தாடி இடம் காசை தொலைத்தவன் நடிப்பு நல்ல லாபம் தரும் ஒரே தொழில்.எல்லாரும் நடிக நடிகை ஆக கிளம்புங்கடா...
Rate this:
குண்டக்க மண்டக்க - koodikal kodukkum theru koodi,இந்தியா
04 அக், 2010 - 14:38 Report Abuse
 குண்டக்க மண்டக்க பணம் கொடுக்கும் பேமாளி மக்கள் இருக்கும் போது இந்த கோமாளிகளுக்கு ஏன் இவ்வளவு பணம் கொடுக்கமாட்டார்கள்..
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in