ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சேலம் சந்திரசேகர் தயாரிப்பில் ஏ.வெங்கடேஷ் இயக்கிய படம் கில்லாடி. இப்படத்தில் பரத் - நிலா நடித்தனர். படப்பிடிப்பு தொடங்கிய போது நாயகி நிலா குளியல் காட்சியில் நடிக்க மினரல் வாட்டர் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு தயாரிப்பாளர் மறுத்துள்ளார். இதனால் படப்பிடிப்பு நின்றது. பின்னர் சமாதானமாகி மினரல் வாட்டரில் நிலாவின் உடம்பு வெள்ளை நிற உடையில் பவுர்ணமி நிலா போல் பளிச்சிட்டு குளியல் காட்சி எடுக்கப்பட்டது. ஆனாலும் படம் திரைக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் ரசிகர்களை கவரும் விதமாக எம்.ஜி.ஆரை போற்றும் பாடல் வந்து புரட்சி தலைவர் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பரத் பாடும் பாடல் காட்சி படத்துக்கு பலம் சேர்க்கும் என இயக்குனர் எண்ணினார். இதுவும் நடந்தது. இந்நிலையில் கில்லாடி தொடங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 30.01.2015 அன்று திரைக்கு வருவதாக விளம்பரங்கள் பளிச்சிட்டன. இன்றும் கில்லாடி தன் கில்லாடி தனத்தை காட்டி விட்டார். படம் திரைக்கு வரவில்லை தயாரிப்பாளர்களுக்கு பணம் சப்ளை செய்தவர்கள் பிரச்சனை கொடுத்துள்ளனர். இதை தயாரிப்பாளர் சங்கம் பேசி தீர்வு கண்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு நிலாவை யாரும் நாயகியாக புக் பண்ணவில்லை.