இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'சுப்ரமணியபுரம்' அடித்த டார்ச்லைட் வெளிச்சத்தில் பளிச்சென அறிமுகமானவர் ஸ்வாதி. கடந்த 2012ல் ஒரு படம் கூட இவருக்கு ரிலீசாகாத நிலையில் அடுத்த வருடம் நான்கு படங்கள் வெளியாகி ஆச்சர்யப்படுத்தின. போன வருடம் கூட இவர் நடிப்பில் ஐந்து படங்கள் வெளியாகின. தற்போது தமிழில் யட்சன், யாக்கை மற்றும் மலையாளத்திள் டபுள் பேரல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'ஆடு ஒரு பீகர ஜீவியானு' படம் இந்த வாரம் வெளியாகிறது.
இப்படி தமிழிலும், மலையாளத்திலும் மாறி மாறி நடித்துக்கொண்டிருக்கும் ஸ்வாதி, தெலுங்கில் நாகார்ஜூனா இரட்டை வேடங்களில் நடிக்கும் 'சொக்கடே சின்னி நாயனா' என்கிற படத்தில் மகனாக நடிக்கும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கும்படி வாய்ப்பு தேடிவர 'நோ' சொல்லிவிட்டாராம்.. காரணம் அவர்கள் கேட்ட தேதிகளை தமிழிலும், மலையாளத்திலும் நடிக்க ஏற்கனவே ஒதுக்கி கொடுத்துவிட்டாராம். ஆனால் நாகார்ஜூனாவின் ரசிகர்களை இவரது மறுப்பு கொந்தளிக்க வைக்க, சமூக வலைதளங்களில் இவர் மீது அனலை கக்கி வருகின்றனராம். நாகார்ஜூனாவுடன் நடிக்கமுடியாத தன் சூழ்நிலையை பொறுமையாக விளக்கி வருகிறாராம் ஸ்வாதி.