தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அமெரிக்க அதிபர் ஒபாமா, சில தினங்களுக்கு முன்னர் இந்தியா வந்தார். இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அதனைத்தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஒபாமாவை வெகுவாக கவர்ந்துவிட்டது.
இந்நிலையில், மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து ஒபாமா பேசும்போது ஷாரூக்கானின் பெயரையும் குறிப்பிட்டு பேசினார். மேலும் ஷாரூக்கான் நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே படத்தில் இடம்பெற்ற செனோரிட்டா, படே படே தேஷோன் மெய்ன்... என்ற வசனத்தையும் குறிப்பிட்டு ஒபாமா பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஒபாமா, தன்னை குறிப்பிட்டு பேசியதை பெருமையாக கருதுகிறார் ஷாரூக். இதுகுறித்து ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மத நல்லிணக்கம் மற்றும் சம உரிமை குறித்து ஒபாமா பேசும்போது எனது பெயரையும் குறிப்பிட்டதை பெருமையாக நினைக்கிறேன். ஆனால், அவருக்காக என்னால் 'பாங்கரா..' டான்ஸ் ஆட முடியாமல் போனது வருத்தம். அடுத்த முறை நிச்சயம் அவருக்காக சய்ய சய்யா பாடலுக்கு நடனமாடுவேன்" என்று கூறியுள்ளார்.