மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் |
கேரளாவின் பிரபலமான இளம் நடனக் கலைஞர் பிரயஹா. அவரை பிசாசு படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் மிஷ்கின். படத்தில் அவர்தான் ஹீரோயின் என்றாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய காட்சிகளிலேயே அவர் அழகான நிஜ தோற்றத்துடன் வருவார். பெரும்பாலான காட்சிகளில் பிசாசாக நடித்திருப்பார். இயக்குனர் பாலா தயாரிப்பு, மிஷ்கின் இயக்கம் என பெரிய டீமாக இருந்ததால் நம்பி நடித்தார்.
இந்தப் படத்தில் குறைவான காட்சிகள்தான். அடுத்த படத்தில் நிச்சயம் முக்கியமான கேரக்டர் தருகிறேன் என்று மிஷ்கின் வாக்குறுதி கொடுத்தாகவும் கூறப்படுகிறது. இப்போது மிஷ்கின் அடுத்த படத்தை ஆரம்பிப்பது தாமதமாவதால் மல்லுவுட்டில் வாய்ப்பு தேடினார் அதற்கு பலன் கிடைத்திருக்கிறது.
கார்டூன் என்ற மலையாளப் படத்தில் பகத் பாசில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழில் திகில் படத்தில் நடித்ததைப்போல இதுவும் திகில் படம்தான். ஆனால் பேய் படமல்ல. இப்போது சந்தோஷத்தில் இருக்கிறார் பிரயஹா. ஆனாலும் அவரது முழு கவனமும் தமிழ் சினிமா மீதுதான் இருக்கிறது. தமிழிலும் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார்.