Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரீமேக் ஜாம்பவான்களின் கவனம் இப்போது ரவிதேஜா பக்கம்..!

28 ஜன, 2015 - 14:28 IST
எழுத்தின் அளவு:

டோலிவுட்டின் மாஸ் மகாராஜ் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரர் ரவிதேஜா. தெலுங்கில் பிரபலமாகவும், தமிழில் ஓரளவிலும் பரவயிருந்த அவரது புகழ் பளிச்சென இந்தியா முழுவதுக்கும் கவனம் பெற்றது என்றால் அது தெலுங்கில் அவர் நடித்த 'கிக்' படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான் கான் நடித்தபோதுதான். தமிழ், கன்னடம், கடைசியாக இந்தி என பல மொழிகளில் ரீமேக்கானாலும் ரவிதேஜாவின் ஒரிஜினல் 'கிக்' தான் பவர்புல்லாக இருந்தது. அதுதான் அவரை மாஸ் மகாராஜாவாகவும் ஆக்கியது என்றுகூட சொல்லலாம்.


ரவிதேஜா படங்களை அவரோட ரசிகர்கள் எந்த அளவு எதிர்பார்ப்பார்களோ அதே அளவுக்கு நம்ம தமிழ்சினிமா ஹீரோக்களும் ஆவலோட எதிர்பார்ப்பார்கள்.. வேற எதுக்கு..? தமிழில் ரீமேக் செய்வதற்குத்தான். ஜெயம் ரவி நடித்த 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி', 'தில்லாலங்கடி' மற்றும் கார்த்தி நடித்த 'சிறுத்தை'ன்னு ரவிதேஜா நடித்த படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வெற்றிபெற்றிருக்கின்றன. இப்போது லேட்டஸ்டாக அவர் நடித்துள்ள கிக்' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள 'கிக்-2'வின் ரிலீசையும் அதேபோல ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் தென்னிந்திய ரீமேக் ஜாம்பவான்கள்.. இந்த இரண்டாம் பாகத்தில் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடித்திருப்பவர் ராகுல் பிரீத் சிங். 'கிக்'கை இயக்கிய சுரேந்தர் ரெட்டியே 'கிக்-2'வையும் இயக்கியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in