Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்”

28 ஜன, 2015 - 12:40 IST
எழுத்தின் அளவு:

தமிழ் திரையுலகின் இன்று உடனடி தேவையை புரிந்து கொண்ட திரு ஆதித்யராம் அவர்கள், “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்பு தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார். தமிழ் திரையுலக இயக்குனர்களின் கதை கனவுகளை நிஜங்களாக்கும் இடமாக தற்போது இவரின் “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” திகழ்ந்துவருகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மாசு புகாத படப்பிடிப்புதளமாக இருப்பது ஆதித்யாராம் ஸ்டுடியோஸீற்கு மிகப்பெரிய பலமாக விளங்குகிறது. இருபத்தைந்து ஏக்கரில் மிகப் பிரம்மாண்டமாக ஈ.சி.ஆர் சாலையில் அமைந்திருக்கிறது. இரண்டு பகுதிகளாக மொத்தம் இருபத்தைந்து ஏக்கர்களை உள்ளடக்கியது ஆதித்யாராம் ஸ்டூடியோஸ்.


இங்குதான் தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட படங்களான உலகநாயகன் கமல் ஹாசனின் “தசாவதாரம்” மற்றும் கார்த்தி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த “ஆயிரத்தில் ஒருவன்” படங்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.


தற்போது இளையதளபதி விஜய், ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன் மற்றும் ஸ்ரீதேவி நடிப்பில், பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில பெரும்பொருட்செலவில் தயாராகிவரும் “புலி” படத்தின் படப்பிடிப்பு பிரத்யேகமாக நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு வளாகத்தின் முதல் பகுதியில் பிரம்மாண்டமான முறையில் புலி படத்தின் பாடலுக்கான அரங்குகள் அமைக்கபட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆதித்யாராம் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. ஆதித்யாராம் அவர்கள் ஒரு வெற்றி படத்தயாரிப்பாளர். இவர் தயாரித்த “ஏக் நிரஞ்சன்”, “குஷி குஷிகா”, “ஸ்வக்தம்”, “சண்டதே சண்டதே” படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது படங்களை தயாரித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in