Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

போலியான வெற்றி விழாக்கள் - ஸ்பெஷல் ஸ்டோரி!

27 ஜன, 2015 - 15:18 IST
எழுத்தின் அளவு:

சினிமாவில் வெற்றி விழாக்கள் தவிர்க்க முடியாதவை. சில நூறுபேர்களின் உழைப்பை பல லட்சம் பேர் அங்கீகரித்து தங்கள் பணத்தையும் நேரத்தையும் தந்ததை கொண்டாடும் வகையில் ஒரு படத்தின் வெற்றி விழாக்கள் நடந்தது ஒரு காலம். முதலமைச்சர்களே வந்து படத்தின் வெள்ளி விழா. 100 வது நாள் விழாவுக்கு வந்து தலைமையேற்று நடத்தி நினைவு பரிசு கொடுத்திருக்கிறார்கள். மதுரை, திருச்சி, கோவை போன்ற பெரிய நகரங்களில் மாநாடு போன்று நடந்த வெற்றி விழாக்களும் உண்டு.


ஆனால் இன்றைக்கு வெற்றி விழாக்கள் நடைபெறுவதில்லை. காரணம் எந்தப் படமும் 100 நாட்கள் ஓடுவதில்லை. வெள்ளி விழாக்கள் கொண்டாடுவதில்லை. வெள்ளிக்கிழமை ரிலீசானால் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் படம்பெட்டி திரும்பி விடுகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு தாண்டி திங்கள் கிழமைக்கே பல படங்கள் தாக்குபிடிக்க முடியாமல் போகிறது. அதையும் தாண்டி சும்மானாச்சுக்கும் 100வது நாள் போஸ்டர் ஒட்டி தன் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வதற்காக ஒரு தியேட்டரில் ஒரு காட்சி ஓட்டுவது உண்டு. அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன் மாதிரி படம் பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாயும், குவார்ட்டரும் கொடுத்து 260 ஓட வைப்பது தனிக் கதை.


அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்து மூன்றே நாளில் காசை அள்ளிவிட வேண்டும் என்பதுதான் இன்றைய பிசினஸ் கணக்கு. நான்காவது நாளில் திருட்டு விசிடி வந்துவிடும், படத்தை பற்றி மவுத் டாக், பேஸ்புக், டுவிட்டரில் வந்துவிடும் என்பதால் இந்த அவசரம். இப்படி இருக்கும்போது வெற்றி விழா எப்படி நடக்கும். விஜய் நடித்த கில்லி, ரஜினி நடித்த சந்திரமுகி படங்களுக்குதான் கடைசியாக வெற்றி விழா நடந்தது. இப்போது வெற்றி விழாக்கள் இல்லை கேடயங்கள் இல்லை. அது அடுக்கி வைக்க நடிகர் நடிகைகள் வீட்டில் ஷோ கேசும் இல்லை.


இப்போதும் வெற்றி விழாக்கள் நடக்கிறது. ஆனால் அவைகள் போலியானவை. இன்னும் சொல்லப்போனால் அதுவும் ஒரு வியாபார தந்திரம்தான். சக்சஸ் மீட் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த கேலிக்கூத்துகள் சமீபகாலமாக அதிகரித்து விட்டது.


ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம் படங்கள் தவிர மற்ற படங்கள் வெள்ளி, சனி, ஞாயிறு தாண்டி திங்கட் கிழமைக்கு பிறகு டல் அடிக்க ஆரம்பிக்கும். மேற்குறிப்பிட்ட நடிகர்களில் படங்கள்கூட ரொம்ப சுமார் மூஞ்சி குமாராக இருந்தாலும் இதே கதிதான். திங்கட்கிழமைக்கு பிறகு படத்தை தூக்கி நிறுத்த ஒரு உந்துதல் வேண்டும் அதுதான் இந்த சக்சஸ் மீட், அல்லது சக்சஸ் பார்ட்டி பார்முலா.


ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டுப்போடுகிற, ஜெயிக்கிற அணிக்கு கைதட்டுகிற மனோபாவம் கொண்டவர்கள் நாம். இந்த மனோபாவத்தை சாதகமாமாக்கி கொள்கிற தந்திரம்தான் இது. சக்சஸ் மீட் நடத்தி படம் செம ஹிட்டு என்கிற ஒரு மாயத் தோற்றத்தை உண்டாக்கி மக்களை கவர்கிறார்கள். "படத்துக்கு சக்சஸ் மீட் வைக்கிறாங்க. அப்போ படம் நல்லா இருக்கும்போல..." என்று தியேட்டருக்கு வருவார்கள் என்பது ஒரு வியாபார கணக்கு.


அதனால் படம் ஓடுகிறதோ, இல்லையோ வெள்ளிக்கிழமை ரிலீசாகும் படத்துக்கு சனி அல்லது ஞாயிற்றுக் கிழமையில் சக்சஸ் பார்ட்டி வைத்துவிடுகிறார்கள். ஒரு படத்தின் வெற்றி தோல்வியை 48 மணி நேரத்தில் எப்படி கணிக்க முடியும் என்று தெரியவில்லை.


சமீபத்தில் ஒரு படத்தின் சக்சஸ் மீட் நடந்தது. கலந்து கொண்ட ஒருவரின் முகத்தில் கூட மகிழ்ச்சி இல்லை. காரணம் படம் எதிர்பார்த்த வசூலைத் தரவில்லை. நஷ்டமாக போகிறது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்ததுதான். கடந்த ஆண்டு ஒரு பெரிய நடிகர் நடித்த படம் பெரும் தோல்வி அடைந்தது. கத்துக்கிட்ட மொத்த வித்தையை அந்த இயக்குனர் இறக்கியும் படம் தோற்றது. அந்த படம் வெளிவதற்கு முன்பே யூ-டியூப்பில் அதன் டீசரை இத்தனை லட்சம் பேர் பார்த்தார்கள் என்று சொல்லி ஒரு வெற்றி விழாவை நடத்தினார்கள். யூ டியூப்பில் பார்த்தவர்களில் பத்து சதவிகிதம் பேர் தியேட்டரில் பார்த்திருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கும். இனி இந்த வெற்றி விழாக்களை எப்படியெல்லாம் கொண்டாடப்போகிறார்களோ தெரியவில்லை. படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியானதைக்கூட இனி வெற்றியாக கொண்டாடுவார்கள் போல...


சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in