இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
'தெகிடி'க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்த ஜனனி ஐயருக்கு தமிழ் கூறும் நல்லுலகம் கைவிரிக்க, நீ இங்க வாம்மா மின்னல் என அள்ளிக்கொண்டது மலையாள திரையுலகம்.. கடந்த வருடம் மட்டும் ஜனனி ஐயர் மலையாளத்தில் நடித்து மூன்று படங்கள் வெளியாகிவிட்டன.. இப்போது இன்னும் மூன்று மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.. போகிறபோக்கில் ஒரு தமிழ்ப்பட வாய்ப்ப்பும் கதவை தட்டியிருக்கிறது..
இப்போது விஷயம் என்னவென்றால் கடந்தவருடம் ஜனனி நடிப்பில் வெளியான 'மொசையிலே குதிரை மீனுகள்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள இளம் ஹீரோ ஆசிப் அலி.. இதையடுத்து கடந்த வருடமே ஜனனி நடிக்க ஒப்பந்தமாகி விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'ட்ரைவர் ஆண் டூட்டி' படத்திலும் ஆசிப் அலி தான் ஜோடி.. இப்போது லேட்டஸ்டாக கௌதம் மோகன் இயக்கும் (கௌதம் மேனன் இல்லீங்க) என்பவர் இயக்கும் 'ஹேப்பி பர்த்டே' படத்திலும் ஜனனி ஐயருக்கு ஜோடியாக நடிப்பவர் சாட்சாத் ஆசிப்பே தான். நம்ம ஊரென்றால் இந்நேரத்துக்கு உடனே கிசுகிசு கிளம்பியிருக்கும்... கேரளாவில் எப்படியோ..?