Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வித்தியாசமான முறையில் கல்யாண சாப்பாடு போட துடிக்கும் மலையாள நடிகர்..!

27 ஜன, 2015 - 13:34 IST
எழுத்தின் அளவு:

இது எந்த நடிகரின் திருமணம் பற்றிய செய்தியும் இல்லை... இது விஷயமே வேறு.. கொஞ்சம் காமெடியாகக்கூட இருக்கும். 'பாட்ஷா'வில் நக்மாவின் அப்பா கேசவனாக நடித்த தேவனை உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை.. தமிழில் அவ்வப்போது குணச்சித்திர வேடங்களில் தலைகாட்டினாலும் முக்கால்வாசி நேரத்தை மலையாள சினிமாவுக்கே ஒதுக்கிவிட்டார். கடந்த வருடம் இவர் நடித்த 'ஹவ் ஓல்டு ஆர் யூ' படமும் கடந்த வாரம் இவர் நடித்து வெளியான மோகன்லாலின் 'ரசம்' படமும் ஆச்சர்யமான ஒரு ஒற்றுமையை கொண்டிருக்கின்றன.


'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தில் மிகப்பெரிய ஜவுளிக்கடை ஓனராக வரும் தேவன், தனது மகள் திருமணத்தின்போது ரசாயன உரம் இல்லாமல் தயாரான இயற்கை காய்கறிகளை வைத்து கல்யாண சாப்பாடு போடவேண்டும் என்பதற்காக மெனக்கெடுவார்.. அப்படிப்பட்ட காய்கறிகளை இயற்கையாக விளைவிக்கும் மஞ்சு வாரியரிடம் அதற்கான காண்ட்ராக்ட்டை கொடுப்பார். மஞ்சுவும் திருமண தினத்திற்கு முதல்நாள் சொன்னபடி தேவையான காய்கறிகளை ஒப்படைப்பார்.


தற்போது கடந்த வாரம் வெளியான 'ரசம்' படத்தில் அரபு நாட்டில் பிசினஸ் செய்யும் தொழிலதிபராக நடித்திருக்கிறார் தேவன்.. இந்தப்படத்திலும் தனது மகள் திருமணத்தின்போது வித்தியாசமான கல்யாண சாப்பாடு போடவேண்டும் என நினைப்பார் தேவன். தனது மகளின் திருமணத்தை, அரபு நாட்டிலேயே நடத்த நினைத்தாலும் தனது சொந்த ஊரின் பாரம்பரிய கல்யாண சாப்பாட்டை போட்டு அங்குள்ளவர்களை அசத்த விரும்புவார் தேவன்..


இதற்காக கேரளாவில் பிரபல சமையற்காரரான நெடுமுடி வேணுவை ஒப்பந்தம் செய்ய கேரளாவுக்கு வருவார்... எங்கே வெளிநாட்டுக்கு வந்து சமையல் செய்ய, நெடுமுடிவேணு மறுத்துவிடுவாரோ என்று, சிபாரிசுக்காக தனது நண்பரான சூப்பர்ஸ்டார் மோகன்லாலையே அழைத்து வந்து பேசி, அவரை சம்மதிக்க வைப்பார். (மோகன்லால் இதில் நடிகராக, சூப்பர்ஸ்டார் மோகன்லால் கதாபாத்திரமாகவே நடித்திருந்தார்).. இந்த இரண்டு படங்களிலும் தேவனுக்கு ஒரே மாதிரியான கேரக்டர்கள் அமைந்தது ஆச்சர்யமானதுதான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in