ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் கருப்பு நிலா... என்ற பாடலைப் பாடி குழந்தை நட்சத்திரமாக இருக்கும் போதே கவனிக்கப்பட்டவர் அந்த மூன்றெழுத்து .....கா நடிகை. அதன் பின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் இயக்கிய அழகனுக்கு எதிர்ச் சொல் படத்தில் டீன் ஏஜ் பெண்ணாக நடித்தவர், அடுத்து கதாநாயகியாகவும் நல்ல பெயரை எடுத்து விடுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை. சின்னச் சின்னப் படங்கள்தான் அமைந்தன.
இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு அந்த நடிகை திடீரென மதம் மாறினார். மத மாற்றத்திற்கான காரணம், கண்டிப்பாகத் திருமணமாகத்தான் இருக்கும் என்று அப்போதே பேசப்பட்டது. இருந்தாலும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மத மாற்றத்துக்கு வேறு காரணம் இல்லை, 2010லேயே நான் மதம் மாறி விட்டேன் என்றார். எதிர்பார்த்தது போலவே கடந்த மாதம் ஒரு தொழிலதிபரைத் திருமணம் செய்து கொண்டார். இப்படித்தான் ஒரு வாரிசு இசையமைப்பாளரும் மதம் மாறினார், பின்னர்தான் திருமணத்திற்குத்தான் அந்த மதமாற்றம் என்பது தெரிய வந்தது.