Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்

24 ஜன, 2015 - 18:51 IST
எழுத்தின் அளவு:

ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. 1925ம் ஆண்டு, காஞ்சிபுரம் அடுத்த வெம்பாக்கம் ஊரில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்பத்தில் ஒரு சிறிய நாளிதழ் ஒன்றில் பணியாற்றி வந்த ராகவன் பின்னர் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தார்.

1954ம் ஆண்டு வைரமாலை என்ற படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்த ராகவன், எம்.ஜி.ஆர்., சிவாஜி., ஜெமினி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அந்தக்கால நடிகர்கள் தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்டவர்களுடன் இந்தக்கால விமல், விஜய் சேதுபதி வரை பல்வேறு நடிகர்களுடன் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.


சென்னையில் வசித்து வந்த ராகவன், உடல்நலம் சரியில்லாமல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஜன.,24ம் தேதி) மாலை அவரது உயிர் பிரிந்தது.


மறைந்த ராகவனுக்கு இரண்டு மகன்களும், ஒரு பேரனும் உள்ளனர். ராகவனின் உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிசடங்கு ஞாயிறு அன்று நடைபெற இருக்கிறது.



முன்னணி நடிகர்களுடன் வி.எஸ்.ராகவன் நடித்த முக்கியமான படங்கள் சில...


பொம்மை (வீணை எஸ்.பாலசந்தர்)


காதலிக்க நேரமில்லை (இயக்குநர் ஸ்ரீதர்)


கர்ணன் (சிவாஜி கணேசன்)


பட்டணத்தில் பூதம் (ஜெய்சங்கர்)



இரு கோடுகள் (இயக்குநர் கே.பாலசந்தர்)


உரிமைக்குரல் (எம்.ஜி.ஆர்.)


குறத்தி மகன் (ஜெமினி கணேசன்)


தம்பிக்கு எந்த ஊரு (ரஜினி)


நானும் ஒரு தொழிலாளி (கமல்)


பூவெல்லாம் உன் வாசம் (அஜித்)

ஜெ., இரங்கல்: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,உடல் நலக்குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வி.எஸ்.ராகவன் காலமான செய்திகேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். வி.எஸ்.ராகவனின் இழப்பு திரைப்படத்துறைக்கும், கலைத்துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. வி.எஸ்.ராகவனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.



பிரபலங்கள் அஞ்சலி : வி.எஸ்.ராகவன் உடலுக்கு சிவகுமார், கார்த்தி, ராதாரவி, மன்சூர்அலிகான், சார்லி, செந்தில், டைரக்டர்கள் வாசு, சி.வி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.


உடல் தகனம் : பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.


வி.எஸ்.ராகவன் மறைவு வீடியோ : http://www.dinamalar.com/video_inner.asp?news_id=33350&cat=32


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in