இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதினின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் ஒரு படம் உருவாக இருக்கிறது. ஆண்டனி டிசோசா இயக்கும் இப்படத்தில், அசாரூதினாக இம்ரான் ஹாஸ்மி நடிக்கிறார். இப்படம் ரியலாக வரவேண்டும், எங்கும் செயற்கை தன்மை வந்துவிடக்கூடாது என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படமாக்க எண்ணியுள்ளார். இதற்காக இம்ரான் ஹாஸ்மிக்கு முறைப்படி கிரிக்கெட் பயிற்சி அளித்து நடிக்க வைக்கிறார் இயக்குநர். இதனிடையே, அசாரூதினே இம்ரானுக்கு நேரடியாக பயிற்சி அளிக்க இருக்கிறாராம். அவரது மேனரிசம், ஆடுகளத்தில் பேட்டிங் ஸ்டைல், பீல்டிங் ஸ்டைல் உள்ளிட்ட எல்லா விஷயங்களையும் அவரே கற்று தர போவதாக தகவல் வௌியாகியுள்ளது.