ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கன்னத்தில் முத்தம் கொடுப்பது தெரியும், நெற்றியில் முத்தம் கொடுப்பது தெரியும், உதட்டில் முத்தம் கொடுப்பது தெரியும்...ஆனால்...அ...ந்த இடத்தில் கூட முத்தம் கொடுக்கலாம் என்பதை ஷமிதாப் படம் மூலம் புதிதாகக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பால்கி.
சில நாட்களுக்கு முன் ஷமிதாப் படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிடப்பட்டது. அந்த டிரைலரின் கடைசி வினாடிகளில் படத்தின் நாயகியான அக்ஷராவின் பின்புறம் தனுஷ் முத்தம் கொடுப்பது போன்ற காட்சி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.
முத்தத்திற்கு பெயர் போன கமல்ஹாசனின் மகள் அப்படிப்பட்ட காட்சியில் நடிப்பது தாராள மனம் படைத்ததுதான், இருந்தாலும் ஏற்கெனவே சினிமாவில் இன்றைய இளைஞர்கள் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என ஒரு பக்கம் குரல் கேட்டுக் கொண்டிருக்க இப்படிப்பட்ட ஒரு காட்சியை படத்தில் எப்படி வைத்தார்கள் என்பதுதான் கேள்வியாக எழுந்துள்ளது. அதை தணிக்கைத் துறையும் அனுமதித்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்திய அளவில் மிகப் பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசனின் மகளான அக்ஷரா ஹாசன், ரஜினிகாந்தின் மருமகனான தனுஷ் ஆகியோர் அந்தக் காட்சியில் நடித்திருப்பது இங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனரிடம் கேட்டால் அது ஒரு யதார்த்தமான காட்சி, வேண்டுமென்றே திணிக்கப்படவில்லை என்றுதான் நியாயம் கற்பிப்பார். ஆனால், குறைந்த பட்ச சமூக அக்கறை கூட இல்லாமல் இப்படி ஒரு காட்சி இருக்க வேண்டிய அவசியம் என்ன...ம்ம்ம்...இந்திய சினிமா எங்கோ போய்க் கொண்டிருக்கிறது என்கிறார்களே, அது இதுதானா...!