ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கில்லி நடிகரோட புதிய படத்துக்கு இரண்டு எழுத்து விலங்கு பெயர் வைத்தார்கள். அந்த பெயரில் வந்த படங்களோ, அந்த பெயரை முன்னும் பின்னுமாக கொண்ட படங்களோ இதுவரை வெற்றி பெறவில்லை. உச்ச நடிகர் நடிச்ச பாயும்விலங்கு கூட பெரிதாக பேசவில்லை. அதனால் கில்லி நடிகர் படமும் அந்த விலங்கு பெயர் செண்டிமெண்டுக்கு தப்பாது என்று நெட்டிசன்கள் நெட்டில் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் படத்தின் பெயரை மாற்றிவிடலாமா என்று கில்லி நடிகர் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கிறாராம். இயக்குனர், தன்னோட உதவியாளர்களிடம் ஆளுக்கு 100 தலைப்புகள் எழுதிட்டு வாங்கன்னு சொல்லியிருக்காராம். படம்கூட சீக்கிரம் முடிஞ்சிடும்போல... இந்த தலைப்புதாங்க பிடிபடவே மாட்டேங்குது என்று தவிக்கிறாராம் தயாரிப்பாளர். அந்த விலங்கு பெயர் வச்சதாலோ என்னவோ இப்போ டைட்டிலே விலங்கு மாதிரியே பதுங்கிக்கிட்டிருக்கு.