டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருமணம் செய்துகொண்டபின் செலக்டிவான படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் 'ஆட்டோகிராப்' கனிகா.. நான்கு வயது பையனுக்கு அம்மாவாகிவிட்ட அவருக்கு, கடந்த வருடத்தில் மலையாளத்தில் அவர் நடித்த 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' படம் நிறைய பாராட்டுகளை வாங்கி தந்தது. ஆனால் சமீபத்தில் அவர் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் தேவையற்ற சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.
ஒன்றுமில்லை. அந்த புகைப்படத்தில் சமீபத்தில் தனது தோழிகளுடன் தாய்லாந்து சென்றிருந்த கனிகா, ஷார்ட்ஸும் ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்திருந்தார். அதை பார்த்த பேஸ்புக் வட்டாரத்தில் பலர், திருமணமான பெண் இப்படி ஷார்ட்ஸ் அணியலாமா? உன் வயசென்ன..? வெட்கமாக இல்லையா? என பலவிதமான கண்டனங்களை கமெண்ட்டுகளாக பதிவிட்டிருந்தனர்.
இதைப்பார்த்து கொதித்தெழுந்த கனிகா, “எனக்கு ஷார்ட்ஸ் அணிவது எவ்வளவு நாள் வரைக்கும் சௌகர்யப்படுகிறதோ அவ்வளவு நாளைக்கு அணிவேன்.. அது 50௦ வயதானாலும் கூட.. அப்படி என்றால் பீச்சுக்கு வரும்போது கூட நான் சேலைகட்டித்தான் வரவேண்டும் என எதிர்பார்ப்பீர்களோ..? பெண்களை எப்படி மதிப்பதென்று கற்றுக்கொள்ள கொஞ்ச நேரமாவது ஒதுக்குங்கள்.. நானும் கடவுளிடம் உங்களுக்கு கொஞ்சமாவது இதுகுறித்த ஞானம் வரட்டும் என வேண்டிக்கொள்கிறேன்..” என தன்னை பற்றி கருத்து கூறியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.