மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
'லிங்கா' படத்தால் எங்களுக்கு மிகப் பெரிய நஷ்டம் என வினியோகஸ்தர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, அந்தப் படத்தில் நாயகியாக நடித்த அனுஷ்காவுக்கும் அதிகமான நஷ்டம் என்கிறார்கள். “பாகுபலி, ருத்ரமாதேவி'' ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான் கஷ்டப்பட்டு 'லிங்கா' படத்திற்காக கால்ஷீட் கொடுத்தாராம். அந்த சமயத்தில் விஜய், விஷால், கார்த்தி ஆகியோர் நடிக்கும் படங்களில் கதாநாயகியாக நடிக்கக் கேட்டிருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்த வாய்ப்புகளையெல்லாம் ஒதுக்கி விட்டு 'லிங்கா' படத்தில் நடித்துக் கொடுத்தார்.
படம் வெளிவந்ததும், அனுஷ்காவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனால் அனுஷ்கா ரொம்பவே வெறுத்துப் போய் விட்டாராம். ஒழுங்காக அந்தப் படங்களிலாவது நடித்திருக்கலாம். பெரிய இயக்குனர், பெரிய நடிகர் என்று நடித்தது தப்பாகப் போய்விட்டது என்று நிறையவே வருத்தப்பட்டாராம். அந்தப் படங்களில் நடிக்காததன் மூலம் அனுஷ்காவுக்கு சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு வருமான இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள். அந்தப் படங்களில் நடித்திருந்தால் கோடிகளை அள்ளியிருக்கலாமே என்றும் இப்போது அவருக்கு நெருக்கமானவர்கள் பேசிக் கொள்கிறார்களாம்.
நல்ல வேளை அனுஷ்கா தனக்கும் நஷ்டம் என்று உண்ணாவிரதம் இருக்காமல் விட்டாரே...அதுவரைக்கும் நல்லதுதான்...!