தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கிரிக்கெட் என்றால் சச்சின், சச்சின் என்றால் கிரிக்கெட் என்று எல்லோரையும் பேச வைத்தவர் சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் எழுத்தாளராக மாறினார் சச்சின். சமீபத்தில் அவர் தனது புத்தகத்தை வௌியிட்டார். மேலும் அரசியலிலும், ராஜ்யசபா எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது தனது அடுத்த பரிணாமமாக சினிமாவிலும் களம் இறங்க இருக்கிறார் சச்சின்.
சச்சினின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு படம் உருவாக இருக்கிறது. இதில் சச்சினே ஹீரோவாக நடிக்க இருக்கிறார். பிரபல இயக்குநர் ஜேம்ஸ் எர்ஸ்கைன் இப்படத்தை இயக்க இருக்கிறார். இவர் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து வெற்றி கண்டவர். அதன்காரணமாக இவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை மும்பையை சேர்ந்த தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்துள்ளது.