டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இலங்கையில் விரைவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். சல்மான்கான் தலைமையில் விரைவில் பாலிவுட் நட்சத்திரங்கள் இலங்கைக்கு செல்ல இருக்கின்றனர். பின்னணியில் இருந்து கொண்டு ராஜபக்சேவுக்கு ஆதரவாக பாலிவுட் நட்சத்திரங்களை திரட்டி வருவது அசின் என் தகவலும் உறுதி செய்யப்படாத தகவலும் உண்டு.
இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான் கான் தேர்தல் பிரச்சாரம் செய்ய இலங்கைக்கு செல்லக் கூடாது என்று த மா க தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகள் ஒருபடி மேலேபோய், சல்மான் இலங்கை சென்று ராஜபக்சேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தால் தமிழ்நாட்டில் அவரது படங்களை திரையிட அனுமதிக்க மாட்டம் என்று கூறி இருக்கிறார்.
வேல்முருகனின் அறிவிப்பு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. காரணம் விரைவில் சல்மான் கான் நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்க இருப்பதுதான்..!