விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தீவிர ரசிகன் நான் என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். "ஐ" பட புரோமோஷன் நிகழ்ச்சிகளுக்காக, மும்பை சென்றுள்ள ஐ படக்குழு, அங்கு பலவித நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறது. ஐ படத்தின் ஹீரோ விக்ரமும், ஹிந்தி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஒரு நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் விக்ரம் இணைந்து அசத்தினார். அப்போது இருவரும் பேசிக்கொண்டனர். என்னுடைய சிறந்த நண்பனான விக்ரம், பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக, இங்கு வந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்று சல்மான் கான் கூறினார். ஐ படத்தின் டிரைலரை பார்த்தேன். சிறப்பாக இருந்தது. படத்திற்கும், நிஜத்திற்கும் விக்ரத்தை அடையாளமே காண முடியவில்லை என்று கூறினார்.
விக்ரம் கூறியதாவது, நான் உங்களின் தீவிர ரசிகன். என் மனைவி கூட, சல்மான் கானைப் போன்று அழகாக இருக்க முயற்சி செய்யுங்கள் என்று அடிக்கடி கூறுவார். உங்களுடை ஒவ்வொரு நடவடிக்கைகளையும் நான் கண்டு வியப்பதாக விக்ரம் கூறினார். ஐ படத்தின் ஹிந்தி வெர்சன், 2015ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது.