'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்ரம் நடித்து விரைவில் வெளியாக உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கத்தில் இந்தி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில், சல்மான் கானுடன் சேர்ந்து விக்ரமும் சிறப்பு தோற்றத்தில் வர உள்ளார். இந்தி சின்னத்திரையில் அதிகம் டிஆர்பி பெற்றுவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அதன் 8வது தொடர்ச்சி தற்போது ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள ஐ திரைப்படத்தை விளம்பரப்படுத்த விக்ரம் திட்டமிட்டுள்ளார். எனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுடன் சேர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க விக்ரம் முடிவு செய்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்கும் காட்சிகள் மும்பையில் படம்பிடிக்கப்பட உள்ளன. இதற்காக விக்ரம் மும்பை சென்றுள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி இந்தியிலும் ஐ வெளியாகிறது. எனவே, படம் குறித்த எதிர்பார்ப்பை பாலிவுட்டில் அதிகரிக்கும் நோக்கத்தில் விக்ரம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ்-8ல், ஐ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள உபேன் பாட்டீலும் பங்கேற்றுள்ளார். எனவே இதுவும் ஐ படத்துக்கு நல்ல விளம்பரத்தை தேடித்தரும் என்று விக்ரம் எதிர்பார்க்கிறார்.