பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சுந்தர். சி. இயக்கத்தில் விஷால் தயாரித்து இயக்கியுள்ள ஆம்பள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விஷால் பட விழாவில் தவறாமல் ஆஜராகும் ஆர்யா, ஆம்பள இசைவெளியீட்டு விழாவுக்கும் வரத்தவறவில்லை. அது மட்டுமல்ல, வழக்கம்போல் அனைவரையும் தனக்கே உரிய பாணியில் செமத்தியாய் கலாய்த்தார் ஆர்யா. ஆம்பள படம் எப்ப மச்சான் ரிலீஸ்னு விஷால்கிட்டக் கேட்டேன். பொங்கலுக்குன்னு சொன்னான். பாத்து மச்சான்..பெரிய படங்கள் எல்லாம் வருதுன்னு சொன்னதுக்கு, எவனா இருந்தாலும் வெட்டுவேன்னு சொல்றான் என்று ஜாலியாய் பேசிய ஆர்யா, ஹன்சிகாவையும் விட்டு வைக்கவில்லை.
என்ன படத்தில நடிச்சுக்கிட்டிருக்கேன்னு ஒரு நாள் ஹன்சிகாகிட்டக் கேட்டேன். அம்பாலா படத்தில் நடிச்சுக்கிட்டிருக்கிறதா சொன்னாங்க. அம்பாலாவா? நமக்குத் தெரிஞ்சு அப்படி ஒரு படம் தயாராகவே இல்லையேங்கிற டவுட்டுல யாரு ஹீரோன்னு கேட்டேன். விஷால்னு சொன்னாங்க. அப்புறம்தான் புரிஞ்சுது.. ஆம்பளையைத்தான் இப்படி அம்பாலான்னு சொல்லி இருக்காங்கன்னு..
ஆம்பள படத்தில் வைபவ்வும் நடித்திருக்கிறாராம். அந்த அடிப்படையில் பேச வந்தார் வைபவ். ஹன்சிகா என்னை அண்ணான்னுதான் கூப்பிடுவேன்னு அடம் பிடிச்சு அண்ணா..அண்ணான்னு கூப்பிட்டாங்க. அதுக்காக நான் வருத்தப்படலை. அண்ணான்னு என்ன அர்த்தம்னு உங்களுக்கு தெரியுமே? என்று ஹன்சிகாவுக்கு தமிழ்தெரியாது என்ற தைரியத்தில் ஆபாசமாகப் பேசினார்.