கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
விக்ரம் பிரபு நடித்த, 'சிகரம் தொடு' ஒரு வழியாக, அவரின் சொந்த தியேட்டரான சாந்தியில், 100 நாட்கள் ஓடி விட்டது. இதையடுத்து, அவர் நடித்து, இன்று வெளிவந்துள்ள,'வெள்ளைக்கார துரை'யில், அவருக்கு காமெடி அவதாரமாம். இதுவரை ஆக் ஷன் படங்களில் மட்டுமே நடித்து வந்த விக்ரம் பிரபுவுக்கு, காமெடி அவதாரம் எடுபடுமா என்ற பேச்சு உள்ளது. இந்த படத்தில், இவருடன் ஜோடி சேர்ந்திருப்பது, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' நாயகி ஸ்ரீதிவ்யா. 'விக்ரம் பிரபு - ஸ்ரீதிவ்யா ஜோடி, அவ்வளவு அழகு' என, படக் குழுவினர் பெருமிதத்துடன் கூறுகின்றனர். ஆனால், 'இந்த படத்திற்கு ஸ்ரீதிவ்யாவின் கால்ஷீட் வாங்குவதற்குள், படக் குழுவினருக்கு பெண்டு கழன்று விட்டதாமே' என, கோடம்பாக்க வட்டாரத்தில் முணு முணுப்பு கேட்கிறது.