600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
''அந்தக்காலத்துல எம்.ஜி.ஆர்., சிவாஜியோட கருப்பு வெள்ளை படங்கள்லேயே, எங்க தாத்தா மருதுார் அப்புக்குட்டன் நாயர் குரூப் டான்ஸர். கேரள பாரம்பரிய நடனங்கள்ல, தனி முத்திரையை பதிச்சவங்க என் அம்மா. எங்க மாமா ராஜசேனனோ, மலையாளத்துல முப்பதுக்கும் மேல, வெற்றிப்படங்களை கொடுத்த ஹிட் இயக்குனர். நான் சினிமாவுல நுழைய இதுக்கு மேல காரணம் வேணுமா என்ன?'' பயோடேட்டாவையும் 'எடிட்' செய்து பில்டப் ஏற்றுகிறார் உதவி படத்தொகுப்பாளர் விஷால்.
விஷால் சென்னைக்காரரா?
''சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். சினிமா கனவால சென்னை வந்தேன். பிரசாத் ஸ்டுடியோவுல 'எடிட்டிங்' படிக்க வாய்ப்பு கிடைச்சது. படிச்சிட்டிருக்கும் போதே, படத்தொகுப்பாளர் ராஜா முகம்மது சார், அவர்கூட வேலை பார்க்க அனுமதிச்சார். 'அவள் பெயர் தமிழரசி' படத்துல ஆரம்பிச்சு, தமிழ், மலையாளம்னு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்கள்ல வேலை பார்த்தாச்சு!''
மலையாள உலகில் தமிழ் சினிமா கனவுகள் முளைத்தது எப்படி?
''ரஜினி சாரும், கமல் சாரும் தான் முதல் இன்ஸ்பிரேஷன். பாலசந்தர், பாரதிராஜா, பாக்யராஜ், மணிரத்னம், ஷங்கர், கவுதம்மேனன்னு, இங்க இருக்கற அத்தனை பேரும் எனக்கு பிடிச்ச இயக்குனர்கள். அதுமட்டுமில்லாம, மலையாளத்தை விட, தமிழ்சினிமாவுலதான் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்!''
சினிமாவில் 'முதல் கனவு' ஏதாவது?
''நடிகன் ஆகணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, அது பெரிய விஷயம்னு தெரிஞ்சதும் 'எடிட்டர்' ஆகணும்னு கனவை மாத்திக்கிட்டேன். எடிட்டராகிட்டா, நிறைய இயக்குனர்களோட பழகலாம். அதுல யாராவது ஒருத்தர், நம்மளை அடுத்த ரஜினியாவோ, மம்முட்டியாவோ மாத்திட மாட்டாங்களான்னு, மனசுக்குள்ளே ஒரு சின்ன நப்பாசை!''
அப்போ, நடிகன் கனவு அவ்வளவுதானா?
''எந்த வேலை செஞ்சாலும், அதை முழுமையா செய்யணும் இல்லீங்களா! இந்த 'எடிட்டிங்' துறையில, நான் சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும்போது, அதுக்குத்தானே நான் முதல்ல முன்னுரிமை கொடுக்கணும்!''
உங்களோட முதல் சினிமா 'எடிட்டிங்' எப்படியிருக்கும்?
''என்னோட படங்கள்ல, 'எடிட்டிங்' தனியா தெரியாது. கதைக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே என்னோட கத்தரி கொடுக்கும்!''
வெற்றிப்படங்களில் பணிபுரிந்தாலும், படத்தொகுப்பாளர்கள் பரவலாக பேசப்படுவது இல்லையே!
''அந்த நிலைமை இருக்கறது உண்மைதான்! படத்தோட 'புரோமோஷன்'ல நடிகர்கள், இசையமைப்பாளர், பாடலாசிரியர்'னு, அத்தனை பேரும் ஒண்ணா இருந்து 'பிரஸ் மீட்' கொடுக்கற போது, படத்தொகுப்பாளர்களையும் அறிமுகப்படுத்தி, வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டணும். அப்பதான் இந்த நிலைமை மாறும்!''
சினிமாவில் ஆகப்பெரிய அழகிய கனவுகள்?