நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
விக்ரம் பிரபு, மோனல் கஜ்ஜார் நடித்த சிகரம் தொடு படத்தை கவுரவ் இயக்கி இருந்தார். யூடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்தது. கும்கி, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி படங்களுக்கு பிறகு விக்ரம் பிரபு நடித்த படம். முந்தைய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தது. சிகரம்தொடு அப்படி அமையவில்லை. என்றாலும் இதனையும் வெற்றிப்படம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் விக்ரம் பிரபுக்கு இருந்தது. காரணம் அப்போதுதான் மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ள முடியும்.
அதனால் சென்னையில் உள்ள சிவாஜி குடும்பத்து சொந்த தியேட்டரான சாந்தியில் தொடர்ந்து 50 நாள் ஓடியது-. அந்த செய்தியை வெளியிடும்போதே இதே தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம். அதே மாதிரி இன்று 100 வது நாளை சாந்தி தியேட்டரில் சிகரம் தொட்டுவிட்டது. கடந்த செப்டம்பர் 12ந் தேதி வெளியான படத்துக்கு இன்று 100வது நாள்.