சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இதயம், காதல் தேசம், காதலர் தினம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் கதிர். இதயம் படத்தில் முரளி-ஹீராவை நடிக்க வைத்த அவர், காதல் தேசம் படத்தில் வினீத்துடன் அப்பாஸை நடிக்க வைத்தார். தபு நாயகியாக நடித்திருந்தார். அதன்பிறகு காதலர் தினம் படத்தில் குணாலை அறிமுகம் செய்தார். இவர்கள் இரண்டு பேருமே அவர்கள் நடித்த படங்கள் ரிலீசான நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்கள்.
ஆனால் தொடர்ச்சியாக ஹிட் படங்களை கொடுத்து வந்த கதிர், காதல் வைரஸ் படத்தின் தோல்விக்கு பிறகு படம் இயக்கவில்லை. சில படங்களை இயக்குவதாக அறிவிப்புகள வந்தன. ஆனால், படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இந்நிலையில், கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுககுப்பிறகு தற்போது ஒரு கன்னட படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் கதிர்.